எவிடன்ஸ் பார்வை செய்து எதிரொலியாக தஞ்சை அரசு இராச மிராசுதார் மருத்துவமனையில் வசதி அமலுக்கு வந்த திட்டம் -


எவிடன்ஸ் பார்வை செய்து எதிரொலியாக தஞ்சை அரசு இராச மிராசுதார் மருத்துவமனையில் வசதி அமலுக்கு வந்த திட்டம் 
தமிழகத்தில் பிரசவத்திற்கு என்று பெயர் போன மருத்துவமனை தஞ்சை அரசு இராச மிராசுதார் மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வெளியூரிலிருந்து 1000 ககும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகை தந்து சிகிச்சை பெற்று வருவதால் தஞ்சை பெரிய கோவிலுக்கு அடுத்து தஞ்சை மண்ணிற்கு புகழாரம் சேர்க்கும் துறையாக அரசு இராச மிராசுதார் மருத்துவத்துறை ஆகும்.
இந்த மருத்துவத்திற்கு கர்ப்பிணி பெண்கள் நோயாளிகளை அழைத்து வரும் உறவினர்களின் வாகனங்களையும், மற்றும் மருத்துவர்களின் வாகனங்களையும் வெளியே சுற்றித் திரியும் சில சமூக விரோதிகள் மருத்துவமனைக்குள் நுழைந்து வாகனங்களை திருடி வருவதாககவும், காருக்கென்று பார்க்கிங் வசதிகள் இல்லை வெளியில்தான் பார்க்கிங் செய்ய வேண்டும் என்ற  நிலை உள்ளது என எவிடன்ஸ் பார்வை செய்தி குழுவிற்கு தகவல் வந்ததை அடுத்து களத்தில் இறங்கி ஆய்வு செய்து செய்தியை வெளியிட்ட பின்பு மருத்துவர் ஆர் எம் ஓ அமுத வடிவு அவர்கள் மருத்துவமனையில் இருசக்கர வாகனத்திற்கும் நான்கு சக்கர வாகனத்திற்கு பார்க்கிங் வசதி திட்டத்தையும் அமலுக்கு கொண்டுவந்துள்ளார். மேலும் வரும் புதன்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அரசு இராச மிராசுதார் மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மருத்துவமனையில் பார்க்கிங்  வசதி திட்டத்தை கொண்டு வந்த அரசு இராச மிராசுதாரர் மருத்துவமனை துறைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர் மேலும் இருசக்கர வாகனங்கள் திருடு போகாமல் இருப்பதற்கு மருத்துவ காவலாளிகளை 24 மணி நேரம் கண்காணிக்க ஆர் எம் ஓ அமுத வடிவு உத்தரவிட்டுள்ளார்

Comments