மது விலக்கு பிரிவுக்கு தெரிந்தே சில வியாபாரம் நடக்குதே.. அப்படி கைது செய்தால் ஜாமினில் எப்படி வருகிறார்கள்..?? எல்லாம் ஒரு விளம்பரம் தானே..!
தர்மபுரி மாவட்டம் அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையில் காவல் துணை ஆய்வாளர் புஷ்பாகரன் மற்றும் காவலர்கள் அனைவரும் கோட்டப்பட்டி வன காவலர்களுடன் கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லை தேக்கனாம்பட்டி ஓடை அருகே மதுவிலக்கு சம்பந்தமாக கண்காணிப்பில் ஈடுபட்டபோது பின்னர் பெயர் விலாசம் கேட்டறிந்து தங்கராஜ் த/பெ அண்ணாமலை என்பவர்கள் பெயர் விலாசம் கேட்டு தெரிந்த கண்ணூர் வில்லேஜ் கீழக்காடு போஸ்ட் வெள்ளிமலை தாளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் என்பவர் சுமார் 200 லிட்டர் அளவுள்ள ட்ரம்மில் 100 லிட்டர் அளவு கள்ளச்சரையும் ஊறல் போட்டு வைத்திருந்தவரை கைது செய்து வழக்கு அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் பரபரப்பில் உள்ளனர்.
அப்பகுதியில் மதுவிலக்கு போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றார்கள். மேலும் இதுகுறித்து சந்து கடை வியாபாரிகள் மூலம் பாதிக்கப்படும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் யார் யார் எந்த இடத்தில் கள்ள சாராயம், சந்து கடை வைத்துள்ளனர் என்பது பற்றி அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும் ஆனால் இவர்களுக்கு வழக்கு போட எந்த ஒரு சம்பவமும் கிடைக்கவில்லை என்றால் இது போன்ற நபர்களை கைது செய்துள்ளதாக அரசுக்கும் காவல் துறை உயர் அதிகாரிகளிடமும் தகவல் கொடுத்து பாராட்டை பெறுகின்றனர்.
பிறகு கைது செய்த இவர்களை ஜாமினில் விடுவிக்க மறைமுகமாக இதே காவல் துறை அதிகாரிகள் உதவி செய்வதை நினைத்தால் வேடிக்கையாக உள்ளது. மனசாட்சி படி அதிகாரிகள் சமூகத்தின் மீது அக்கறையுடன் செயல்பட்டால் ஒவ்வொரு கிராமத்தில் இருக்கும் சந்து கடை கள்ள சாராய உற்பத்தியைத் தடுக்க முடியும் ஆனாலும் அரசே ஒருபக்கம் சந்து கடை வியபாரி களுக்கு ஆதரவு தருவதாக தகவல் வெளியாகிறது இப்படி இருக்கும் போது இந்த கைதை எப்படி பார்ப்பது என கேள்வி எழுப்புகின்றனர். இருப்பினும் அரூரில் கள்ள சாராயம் ஒழிக்கும் வகையில் சில காவலர்கள் உண்மையாக இருந்து பணியாற்றுவதால் இங்கே இருக்கும் மக்கள் பெண்கள் நிம்மதியாக உள்ளனர். அப்படி இருக்கும் சூழலில் ஓட்டு மொத்த காவல் துறை அதிகாரியையும் குறை சொல்லிட்டு போக முடியாது இந்த பணியில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்
Comments
Post a Comment