தருமபுரி மாவட்டம் - அரசு அலுவலகங்களுக்கு முன்பே கள்ளத்தனமாக விற்பனையில் ஈடுபடும் மறைமுக லாட்டரி புரோக்கர்கள். கப் சிப்பாக இருக்கும் காவல் துறைக்கு கப்பம் கட்டி விட்டார்களா லாட்டரி புரோக்கர்கள்..??

தருமபுரி மாவட்டம் - அரசு அலுவலகங்களுக்கு முன்பே கள்ளத்தனமாக விற்பனையில் ஈடுபடும் மறைமுக லாட்டரி புரோக்கர்கள். கப் சிப்பாக இருக்கும் காவல் துறைக்கு கப்பம் கட்டி விட்டார்களா லாட்டரி புரோக்கர்கள்..??

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மறைமுக புரோக்கர்கள் மூலம் லாட்டரி விற்பனை என்பது அமோகமாக நடைபெற்று வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு முன்பும், பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடை செல்போன் ரீசார்ஜ் கடை, பழக்கடை உள்ளிட்ட கடைகளுக்குள் நடத்தப்படும் இந்த லாட்டரி விற்பனை என்பது தினம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பென்னாகரம் BDO அலுவலகம் முன்பே இந்த லாட்டரி விற்பனையில் ஈடுபடும் ஏஜெண்டுகள், நல்ல நேரம், லயன் குமரன், குயில், விஷ்ணு உள்ளிட்ட பல பெயர்களை துண்டு சீட்டுகளில் அச்சடிக்கப்பட்டு ஏஜென்ட்களை வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூலி வேலைக்கு செல்லக்கூடிய வேலை எளிய மக்கள் இது போன்ற லாட்டரிகளை தினந்தோறும் வாங்கி ஏமாறும் பட்சத்தில் லாட்டரி துண்டு சீட்டுகளை விரக்தியில் ஆங்காங்கே தூக்கி வீசி செல்கின்றனர். காவல்துறையினர் எத்தனை முறை நடவடிக்கை மேற்கொண்டாலும் கூட, இந்த லாட்டரி விற்பனையை தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றன. ஒரு சில பகுதிகளில் காவல்துறையினருக்கு தெரிந்து இந்த லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாகவும் பொது மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.

Comments