கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நில ஆவண முறைகேடு நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட 300 குடும்ப உறுப்பினர்கள் புகார்,

கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நில ஆவண முறைகேடு நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட 300 குடும்ப உறுப்பினர்கள் புகார்,

 மேலும்  300 குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வரும் அங்கீகரிக்கப்பட்ட நத்தம் மனை பகுதியில் சொத்து ஆவணங்களை கடந்த 2009 ஆம் ஆண்டு கணினி பதிவேற்றத்தில் ஏற்பட்ட  பிழைகள் தான் காரணம் என்கிறார் சமூக ஆர்வலர் சஃபானா ஷாஜகான், மேலும் வருவாய்த்துறை நில அளவை துறை செய்த தவறுகள் குறித்தும் திருத்தம் செய்யக்கோரி கும்பகோணம் வட்டாட்சியரிடம் சமூக ஆர்வலர் சஃபானா ஷாஜகான் தலைமையில் 50க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  கோரிக்கை வைத்துள்ளனர், அதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள் சமூக பேச்சுவார்த்தை காரணமாக அரசு ஒரு வாரத்திற்குள் உரிய அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்கிறோம் என  உறுதி அளித்தது காரணமாக மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்,


கும்பகோணம் செய்தியாளர் 
அ, மகேஷ்

Comments