முறைகேடு , தீண்டாமை,பாலியல் தொல்லை, குவியும் புகார்கள்பொம்மிடி பொன். முத்து மாரியம்மன் கோவில் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர கோரிக்கை

முறைகேடு , தீண்டாமை,
பாலியல் தொல்லை, குவியும் புகார்கள்

பொம்மிடி பொன். முத்து மாரியம்மன் கோவில் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர கோரிக்கை

 அதிகாரிகள் ஆய்வு

 தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள பொன். முத்துமாரியம்மன் ஆலயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதால் இந்த ஆலயத்தை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்


 தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி (பொ.மல்லாபுரம்) பேரூராட்சி அருகே அரசு புறம்போக்கு நிலம் சர்வே எண் 3 A 43/3, 3 B 42/3 : 719 ல் சுமார் 30 சென்ட்    நிலம், உள்ளது


 அரசு ஆவணப் பதிவில் மாரியம்மன் கோவில் இடம் என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது  இந்த ஆலயம் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது, பக்தர்களின் நம்பிக்கையின் இடமாகவும் இருந்து வருகிறது, அனைத்து சிறப்புமிக்க நாட்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருவதால் ஆலயத்திற்கு வருவாய் பெருமளவு குவிந்து வருகிறது



கோவில் நிலப் பகுதியில் 21 வணிக கடைகளும் ஆலயம் சுமார் 15 சென்ட் நில அளவில்பொன் முத்து மாரியம்மன்,விநாயகர் கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில் என 3 பாகங்களாக மக்கள் கோவில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர் இவற்றின்சொத்து மதிப்பு மதிப்புசுமார்15 கோடி வரை இருக்கும்

இந்த ஆலயம் கடந்த 50 ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களாலும் வழிபாட்டு இடமாக இருந்து வந்தது, தற்போது இந்த ஆலயத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துக் கொண்டு பட்டியல் சமூக மக்களை கோவிலில் அனுமதிப்பதில்லை, விழா குழுக்களில் சேர்ப்பதில்லை என தொடர்ந்து இந்து அறநிலையத்துறை, எஸ்சி, எஸ்டி கமிஷன், மாவட்ட ஆட்சியர் என புகார்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குவிந்து வருகின்றனர்


 அதேபோல கோவிலில் உள்ள சொத்துக்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து தனிநபர் சொத்துக்களாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், கோவிலில் வரக்கூடிய ஆண்டு முழுவதும் பல லட்ச ரூபாய் பணம், கடைகள் 21 வாடகை பணம் போன்றவற்றையும் முறையான வரவு செலவு கணக்குகள் ,வங்கிக் கணக்குகள் போன்றவைகளையும் அரசின் கவனத்திற்கு எடுத்து வராமல் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும்,இதில் வரும் பணத்தை பிரித்துக் கொள்வதில் இரு தரப்பினரிடையே அடிக்கடி முட்டல்கள் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று பொம்மிடி பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றது


 இதனால் பொது அமைதிக்கு பெரும் குந்தகம் நிலவி வருகிறது, புகார்கள் குவிந்த வண்ணமே இருந்து வருகிறது, மேலும் ஆலயத்திற்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , பொம்மிடிகாவல் நிலையபுகார்களும் வழக்குகளும் இருந்து வருகிறது ,
இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


 மேலும் கோவிலில் உள்ள விலைமதிப்பு மிக்க சிலைகள் காணாமல் போய் உள்ளதாகதிடுக்கிடும் தகவல்களும், சமூகவலைதளங்களில் வெளியாகி கோவிலுக்கு வரும் பக்தர்களையும் பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது


 எனவே இருதரப்பினர்களாக பிரிந்து கோவில் சொத்துக்களை பங்கு போடுவதில் ஏற்பட்ட பிரச்சனை, பாலியல் தொந்தரவு, விலை மதிப்பு மிக்க சிலைகள் காணாமல் போய் உள்ள சம்பவங்கள் போன்றவைகள் காவல் நிலையத்தில், மாவட்ட நிர்வாகத்திற்கும் குவிந்து வருவதாலும் பட்டியல் சமூக மக்களை ஆலயத்திற்குள் அனுமதிக்காமல் புறக்கணித்து வருவதாலும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த ஆலயத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து முறைகேடுகளை தடுத்து நிறுத்தவும்,  நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களும் பக்தர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்

Comments