ஜோலார்பேட்டை அருகே சுற்றுலா தளமான ஏலகிரி மலையில் திடீர் தீ பிடித்து எரிந்ததால் மலையோரம் உள்ள சாலை தடுப்புகள் தீ பிடித்து எரிந்து நாசம் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதி..திருப்பத்தூர் செய்தியாளர் வீர ராகவன்
ஜோலார்பேட்டை அருகே சுற்றுலா தளமான ஏலகிரி மலையில் திடீர் தீ பிடித்து எரிந்ததால் மலையோரம் உள்ள சாலை தடுப்புகள் தீ பிடித்து எரிந்து நாசம் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவதி
மலை சாலையில் புகை மூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை திருப்பத்துர் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலமாக உள்ளது
இந்த சுற்றுலா தளத்திற்கு வார விடுமுறைகளில் தமிழகம் ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்
இந்த நிலையில் ஏலகிரி மலை சுற்றுலா தளத்திற்கு செல்ல வேண்டுமென்றால் மலை அடிவாரத்தில் இருந்து 14 வளைவுகள் உள்ள மலை சாலையை கடந்து செல்ல வேண்டும் இந்த நிலையில் இன்று 13-வது வளைவில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து அந்த தீ மலைச்சாலைகளில் விபத்தை தடுக்க தடுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள டயர்கள் முற்றிலும் தீ பிடித்து எரிந்து வருகிறது.
இந்த தீ தற்போது மளமளவென தீ பிடித்து எரிந்து தீயானது அனைத்து வளைவுகளிலும் பரவி மலைச்சாலைகள் முழுவதுமாக புகை மூட்டமாக காட்சியளித்து வருகிறது இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தற்போது அதிக அளவு சுற்றுலா பயணிகள் மலைக்குச் சென்று வருகின்றனர் .
மேலே சென்று கொண்டுள்ள சுற்றுலா பயணிகள் இந்த தீ பரவி வருவதை பார்த்து சுற்றுலா தளத்திற்கு செல்லாமல் உடனடியாக திரும்பி கீழே செல்கின்றனர்.
மேலும் இந்த புகைமூட்டம் காரணமாக மழை சாலையில் 3 மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
Comments
Post a Comment