ஆம்பூர் அருகே நகை அடகுகடை உரிமையாளர் வெட்டி கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக சொந்த தாய்மாமன் உட்பட 8 பேர் கைது.... வீர ராகவன் திருப்பத்தூர் செய்தியாளர்
ஆம்பூர் அருகே நகை அடகுகடை உரிமையாளர் வெட்டி கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக சொந்த தாய்மாமன் உட்பட 8 பேர் கைது
இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த சொத்து பிரச்சினை காரணமாக அமாவாசைக்குள் அருணை கொலை சாமியார் சொன்னதை நம்பி கூலி ஆட்களை வைத்து தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக வாக்குமூலம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம், மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் அருண் (35) இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆம்பூர் நகைக்கடை பஜாரில் சௌடாம்பிகா என்ற பெயரில் அடகுக்கடை நடத்தி வரும் நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி இரவு கடையை மூடிவிட்டு தனது நண்பருடன் தனித்தனியே இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றபோது சோலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அருணை மடக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர் அப்போது ரத்த வெள்ளத்தில் கூச்சிலிட்ட அருன் முன்னாள் சென்று கொண்டிருந்த அவரது நண்பர் திரும்பி வந்து கூச்சலிட்டபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர் இதில் கழுத்துப் பகுதியில் வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த அருணை தனது நண்பர் முதலுதவி சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
இது குறித்து தகவல் அறிந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு மேலும் மர்ம நபர்களால் வெட்டப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க ஆம்பூர் டிஎஸ்பி குமார் மற்றும் கிராமிய காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் அருணின் சொந்த தாய்மாமன் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டதில் விஜயகுமார் குடும்பத்தாருக்கும் அருண் குடும்பத்தாருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக சொத்து தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும் விஜயகுமார் வீட்டிற்கு கேரளா கொல்லிமலை பகுதியில் இருந்தும் உள்ளூர் பகுதிகளில் இருந்தும் சாமியார்கள் அமாவாசை, பௌர்ணமி தினத்தில் வந்து செல்வது வழக்கமாக இருந்து வந்த நிலையில் இந்த சொத்து பிரச்சனை காரணமாக சாமியார்கள் சொன்னதை நம்பி அமாவாசைக்குள் அருணை தீர்த்துக்கட்ட முடிவு செய்த விஜயகுமார் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்துரு மூலமாக அடியாட்களை வைத்து கொலை செய்ய முடிவு செய்து அதற்காக வாணியம்பாடி, நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த அயாத்பாஷா மகன் முகமது அலி,(23) கோனாமேடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் திருப்பதி(23) கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் ஆகாஷ் (26) சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பார்த்திபன் (27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பூபாலன் மகன் சந்துரு (40), அருணாச்சலம் மகன் ஜெகன் (26) பெரியங்குப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் வெங்கடேசன் (33) ஆகிய பகுதிகளிலிருந்து அடியாட்களை வரவழைத்து அருணை கொலை செய்ய இரண்டு லட்சம் ரூபாய் பேரம் பேசி அதில் 60 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து கொலை செய்ய திட்டம் தீட்டியதில் வெட்டு காயங்களுடன் அருண் தப்பித்து உயிர் பிழைத்துக் கொண்டதால் மறுநாள் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் போலீசாரின் விசாரணையில் விஜயகுமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பேரில் ஆம்பூர் கிராமிய போலீசார் அடகு கடை உரிமையாளரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக அருணின் தாய்மாமன் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணப்பன் மகன் விஜயகுமார் உட்பட 8 பேர் மீது கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களால் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்
ஆம்பூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக சொந்த தாய் மாமனே கூலி ஆட்களை வைத்து நகை அடகு கடை உரிமையாளரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
Comments
Post a Comment