http://www.evidenceparvai.com/2025/04/135.html*வாசலில் வைக்கப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் புகைப்படம்**மக்கள் நாயகனின் படம் வெளியே* *அதற்கான விழா உள்ளே**செருப்பு வெளியே விடுவோம் அது போல இந்த நிகழ்ச்சியா..? அதிர்ந்த போன அரூர் மக்கள் ...!* *முதல்வர் ஸ்டாலின் அவர்களே புரிந்து கொள்ளுங்கள்...?*

தேசத்தந்தை அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் அரசு விழா
தர்மபுரியில் நடைபெற்றது ...செருப்பு வெளியே விடுவோம் அது போல இந்த நிகழ்ச்சி அதிர்ந்த போன அரூர் மக்கள்


நாயகனின் படம் வெளியே
அதற்கான விழா உள்ளே
தேசத் தந்தைசட்ட மாமேதை அம்பேத்கரின் 135 வது ஆண்டு பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது

 அதிலும் தமிழகத்தில் மிகவும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு சமத்துவ நாள் விழாவாக மாநிலம் முழுவதும் அரசு சார்பில் மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் மாமேதை அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை மரியாதை செலுத்தி நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது


  தர்மபுரி மாவட்டத்தில் பெருமளவு ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர் 


அதில் குறிப்பாக  தனித் தொகுதியான ஆரூரில் நகரப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான N.N.மஹால் என்ற திருமண மண்டபத்தில் அரசு விழா நடைபெற்றது


 இதில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா , நாடாளுமன்ற உறுப்பினர் மணி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத், திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் மற்றும் ஏராளமான அரசுத்துறை உயர் அதிகாரிகள் வட்டாட்சியர்கள், பயனாளிகள் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் என மிக பிரம்மாண்டமாக விழா நடைபெற்றது


 இந்த விழாவையொட்டி நலதட்டங்கள் வழங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது


 அந்த நிகழ்ச்சியில் விழாவின் நாயகனான அம்பேத்கரின் புகைப்படம் திருமண மண்டபத்தில் வாசற்படி அருகே வைக்கப்பட்டு பூக்கள் தூவி மாவட்ட ஆட்சியர் சதீஷ், நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற உறுப்பினர் சம்பத், அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தி விட்டு நாயகனின் படத்தை வெளியில் வைத்து விட்டு

இவர்கள் அனைவரும் விழா மேடையில் மிக கம்பீரமாக அமர்ந்து கொண்டு தமிழக முதல்வர்தலைமையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியை அனைத்து தரப்பினரும்காணொளி காட்சி வழியாக பார்த்து ரசித்தனர்


 அவர்கள் பார்த்து ரசித்த முதலமைச்சர் நிகழ்ச்சியில்  துணை முதலமைச்சர், தலைமை செயலாளர் ,அம்பேத்கரின் பேரன், விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன்,காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் ஏராளமான தமிழக அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்,மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் நடைபெற்ற விழாவில்


 விழாவின் நாயகன் சட்ட மாமேதை அம்பேத்கரின் புகைப்படம் விழா மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு மிக கம்பீரமாக விழா நடைபெற்று வந்த வேலையில்


 தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் விழாநாயகன் அம்பேத்கர் படம்
 விழா மண்டபத்திற்கு வெளியே வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டிருந்தது

இச்சம்பவம் பொது மக்களிடையே, ஒடுக்கப்பட்ட மக்களிடையே அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது


தர்மபுரியில் சமத்துவ நாள் நிகழ்ச்சி பெயரளவிற்கு மட்டுமே நடைபெறுகிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது

Comments