திமுக கட்சியில் இருந்த நீக்கப்பட்ட காரிமங்கலம் முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் _ தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் மீது பரப்பும் பொய் கதைகள்..!!!


தருமபுரி மாவட்ட அரசியல் அமைப்புகள் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் வித்தியாசமான வரலாற்றை பெற்றுள்ளது. அந்த வகையில் சமூக சேவையோ, மக்கள் வளர்ச்சியோ, தொழில் வளர்ச்சியோ இல்லை, சாதி புத்தி, நீயா, நானா, பொறக்கம்போதே இந்த ஊரை நான் தான் ஆளவேண்டும் என்ற கேவலமான புத்தி, சுய உழைப்பில் முன்னேற தகுதி இல்லாமல் அடுத்துவரை குறை சொல்லி வளர்வதில் கேடுகெட்ட புத்த,கொண்ட பலர் இங்கே இருப்பதால் அவர்கள் அரசியல் யுத்ததிலும் பலரை அழிக்க பொய் கட்டுரைகளை கூறி வருவது அவர்களின் வளர்ப்பு வம்சத்தில் இருந்தே பிறக்கின்றன. அப்படிப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்ட திமுக அரசியலில் குழுப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. தருமபுரி திமுக மேற்கு மாவட்ட பகுதியில் இணைந்துள்ள காரிமங்கலம் பகுதியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் சாதி ரீதியான ஆபாச பேச்சுக்களை பேசியதால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அவர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்து அவரை திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டது. அய்யோ பதவி பறிபோய் விட்டதே என்ற ஆதங்கத்தில், இதற்கு காரணம் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் என்றும், இனி பழனியப்பனால் நமக்கு , வளர்ச்சி இல்லை, என்று நம்ம ஆட்கள் ஓட்டை இனி பாமக_விற்கு கொண்டு சேர்க்கவேண்டும் ஆனால் நாம் திமுக வின் தீவிர விசுவாசி போல நடிக்க கற்று கொள்ளவேண்டும் என தனது உறவுகளிடம் பரப்பி வருகிறாராம். முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன். இதனால் காரிமங்கலம் திமுக கட்சிக்குள் குழப்பங்களும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போதைய திமுக கட்சி நிர்வாகிகளிடம் கேட்ட போது கிருஷ்ணன் எப்போதுமே கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி தனக்கென்று ஒரு பிம்பத்தை உருவாக்குவார். இன்று அவருடைய வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் கட்சி தலைமைக்கு தெரிந்த பின்னர் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதனால் முன்னாள் ஒன்றிய செயலாளர் திமுக கட்சிக்குள் ஒரு பரபரப்பை ஏற்படுத்த திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்று தற்போது உள்ள இளைய சமூதாய திமுக பொறுப்பாளர்கள் கிருஷ்ணன் மீது குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கிருஷ்ணன் ஒரு குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களையும் நாளிதழ் செய்தியாளர்களையும் வைத்துக்கொண்டு திமுக பொறுப்பாளர்கள் மீது குற்றம் சாட்டி அவதூறு பரப்பி தன்னுடைய சமூக மக்களுக்கு பழனியப்பன் எதிரானவர் போல சித்தரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் திமுக மேற்க மாவட்ட செயலாளரின் தரமோ, திமுக வின் தரமோ குறைந்துவிடுவதில்லை ஏன் என்றால் அவரின் நாடகம் கரிமங்கலம் அரசியல் வட்டாரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் காரிமங்கலம் திமுக வட்டாரங்கள்

Comments