வாணியம்பாடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பிக்கப் வேன் தேசிய நெடுஞ்சாலையில் சிதறிய கீரை கட்டுகள்.
திருப்பத்தூர் வெலக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் தனது பிக்கப் வேன் மூலம் கீரை கட்டுகளை சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்ற பொழுது வாணியம்பாடி வளையாம்பட்டு அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது பிக்கப் வேனை அதிவேகமாக கார் ஒன்று முந்தமுயன்ற போது கார் மீது மோதாமல் இருப்பதற்காக பிக்கப் வேன் ஓட்டுனர் சந்தோஷ் வாகனத்தை கட்டுப்படுத்த முயன்ற பொழுது சாலையில் இருந்த சென்ட்ரல் மீடியம் மீது ஏறி நிலை தடுமாறிய நிலையில் பிக்கப் வேன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் சந்தோஷ் மற்றும் உடன் பயணித்த கிளீனர் ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் கீரை கட்டுகள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறியது.சம்பவ இடத்தில் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வாகனத்தை பாதுகாப்பாக மீட்டனர்.
இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஊர்ந்து சென்றது.
Comments
Post a Comment