தருமபுரி மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஆர்வகோலாரின் திமுக மாவட்ட செயலாளர்களால் ஆபத்து நெருங்கி விட்டது _ எதிர்ப்பு கிளப்பும் விசிக, அதிமுக ,பாமக இனி மக்களால் குசு விட முடியாது அப்படி மீறி விட்டா கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் அடைத்து விடுவேன் என ஆவேச பேச்சு - முதல்வரின் தேர்வு சூப்பர்
தருமபுரி மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஆர்வகோலாரின் திமுக மாவட்ட செயலாளர்களால் ஆபத்து நெருங்கி விட்டது _ எதிர்ப்பு கிளப்பும் விசிக, அதிமுக, பாமக..!
இனி மக்களால் குசு விட முடியாது அப்படி மீறி விட்டா கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் அடைத்து விடுவேன் என ஆவேச பேச்சு -
முதல்வரின் தேர்வு சூப்பர்
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது புதிதாக திமுக கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற தர்மசெல்வன் தலைமையில் நேற்று திமுக அனைத்து பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு அதிகாரிகளையும் மக்களையும் மிரட்டும் தோணியிலும் அவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கக்கூடிய பேச்சாகவும் இருக்கின்றது இதனால் தர்மபுரி திமுக மாவட்ட செயலாளர் அவர்களால் தர்மபுரி மக்களுக்கு ஆபத்து ஏற்பட போகிறது என பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
[2/28, 11:52 AM] Evidence Parvai: மாவட்ட ஆட்சியர், எஸ் பி என அனைத்து அதிகாரிகளும் நான் சொல்றத தான் கேட்கனும்.
தர்மபுரி கிழக்கு மாவட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளராக இருந்த தடங்க சுப்பிரமணி மாற்றப்பட்டு புது மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
முன்ன இருந்த தடங்க சுப்பிரமணி ஊமையாக இருந்தாரு..!
ஆனா இப்ப வந்திருக்கிற தர்ம செல்வம் திமுக பேர அப்படியே காப்பாற்றுகின்ற அளவுக்கு செயல் வீரராக இருக்கிறார்.
அவர் கொஞ்சம் நஞ்சம் நல்வர் இல்லைங்க, திமுகவுக்கு நல்ல பேரை இப்பவே சம்பாதித்து கொடுத்துட்டு வருகிறார்.கட்சிக்காரர் மட்டுமில்ல பொதுமக்களும் பாராட்டி பேசுற அளவுக்கு அவரது பேச்சு இருக்கு.
ஏற்கனவே செந்த கட்சிக்கு உலை வெச்சது எப்படின்னு ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்துச்சு.
அது அடங்குவதற்குள் பதவிக்கு வந்த 10 நாட்களுக்குள் அடுத்த ஆடியோ வெளியாகி இவரது சொந்த முகத்தை வெளிக்காட்ட தொடங்கிடுச்சு.
சரி இவரு எப்படி பேசி இருக்கிறார் என்று நீங்களே படிங்க...:-
இதுல யாரும் தலையிட முடியாது,நீங்க சொல்ற ஆள் எல்லாம் மாத்த முடியாது.நான் லெட்டர் பேட் வெச்சா தான் முடியும்.அதை நீங்க உணர்ந்து கொள்ளணும்.
கலெக்டர் நான் சொல்றத தான் கேக்கணும்,எஸ் பி நான் சொல்றத தான் கேக்கணும்.
கீழ் அதிகாரிகள் சுத்தமா நான் சொல்றத மட்டும் தான் கேக்கணும்.கேட்கலனா அந்த இடத்துல இருக்க மாட்டாங்க.
எந்த அதிகாரியும் குசு கூட என்னை மீறி விட முடியாது.
அப்படி இப்படி கேம் ஆட இடமில்லை.எவரும் கேம் ஆட முடியாது.
ஏன்.., ஆடினால் அவன் கதை முடிஞ்சது.
தலைவர் எனக்கு சொல்லி இருக்காரு ,யாரு அதிகாரி கேட்கலைனா எனக்கு லெட்டர் பேடு கொடு நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி இருக்காரு.
இதுக்கு முன்ன எப்படின்னு எனக்கு தெரியாது,
BDO ஆபிஸ்ல A to Z எனக்கு தெரியணும். ஒன்றிய செயலாளருக்கு தெரியணும்.
இதுல குறுக்கு சால் ஓட்ட முடியாது.
பொறுப்பு அமைச்சர் எப்படி பண்ணார்னு எப்படி புடிச்சாருன்னு எனக்கு தெரியாது.
நான் சொல்றதை கேட்கவில்லன்னா அதிகாரி இருக்க முடியாது.
நீங்க நினைக்கிற ஆள் எல்லாம் சொல்லி, ஆள மாத்த முடியாது.
அதை நீங்க உணர்ந்து கொள்ளனும் சரிங்களா.
இப்படித்தாங்க மிகவும் பணிவாக பேசியிருக்கிறார் நம்ப புது மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் அவர்கள்.
திமுக தலைமை விசாரிக்காமல் மாவட்ட பொறுப்பு கொடுத்தா இப்படித்தான் நடக்கும்.
திமுக தலைமை என்ன செய்ய போகிறது , இப்படி அதிகாரிகளையே மிரட்டல் தோனியால் பேசுகிறார் என்றால் மக்கள் மத்தியில் எப்படி நடந்து கொள்வார்..
வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் தர்மபுரியில் திமுக என்ன ஆகும் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்... காத்திருக்கும் அதிகாரிகள், மக்கள். மேலும் தர்மசெல்வனின் பேச்சுக்கு அதிமுக பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது
Comments
Post a Comment