பதிவுத்துறை அதிகாரிகளுக்கு மாதம் மாதம் லட்ச கணக்கில் டார்கெட் வைத்தாரா அமைச்சர் மூர்த்தி - அரியலூர் மற்றும் பெரம்பலூரில் வெடித்த பூகம்பம்..விசாரணை நடத்துவாரா முதல்வர் ஸ்டாலின்
பதிவுத்துறை அதிகாரிகளுக்கு மாதம் மாதம் லட்ச கணக்கில் டார்கெட் வைத்தாரா அமைச்சர் மூர்த்தி - அரியலூர் மற்றும் பெரம்பலூரில் வெடித்த பூகம்பம்..விசாரணை நடத்துவாரா முதல்வர் ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்த பின்பிலிருந்து அரசு ஊழியர்கள் பொதுமக்கள் என அனைவரும் எந்த பணியாக இருந்தாலும் லஞ்சம் கொடுத்துதான் தங்களுடைய பணியை செய்யும் சூழல் உள்ளதாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக சமீபத்தில் அரியலூர் மாவட்டம் கீழப்பழவூர் சார் பதிவாளர் அலுவலகத்தின் அருகில் இருந்து கொண்டு சில புரோக்கர்கள் சார் பதிவாளர் சே சோபா அவர்களின் பெயரை சொல்லி பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெரும் வீடியோ வெளியானது.
இதனைக்கண்ட சார் பதிவாளரின் ஆதரவாளர்கள் மேடத்தை தேடி வரும் மக்கள் மற்றும் புரோக்கர்கள் நில மோசடி செய்ய முயற்சிக்கும் போது சே சோபா மேடம் அந்த பணியை செய்து கொடுப்பதில்லை. இதனால் புரோக்கர்கள் மேடத்திடம் பேசி மனதை மாற்றி பணத்தை கொடுக்கின்றனர். இதனை நீங்கள் லஞ்சம் என்று எப்படி கூறுவீர்கள் என கேள்வி எழுப்பினார் பெரம்பலூர் மாவட்டத்தைச்சேர்ந்த நில புரோக்கர்கள்.
அதுமட்டுமின்றி சார் பதிவாளர் லஞ்சம் வாங்குவதற்கு காரணமே பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி என்கின்றனர் அரியலூர் பெரம்பலூர் மக்கள். சார் பதிவாளர் அலுவலரை தீபாவளி, பொங்கல், விசேஷ நாட்கள் பண்டிகை நாட்கள் என விட்டு வைப்பதில்லையாம் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் என பத்திர எழுத்தாளர்களிடம் சார்பதிவாளர் அலுவலர்கள் புலம்பி தவிக்கின்றார்களாம்.
திமுக ஆட்சியில்தான் இப்படி ஒரு மோசமான நிலை ஏற்படுகிறது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால் மற்ற பகுதிகளில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலரிடம் கேட்கும்போது அப்படி ஒரு போதும் பதிவுத்துறை அமைச்சரிடமிருந்து எந்த ஒரு டார்கெட் வந்ததில்லை என்கின்றனர்.
அப்படி என்றால் அரியலூர், பெரம்பலூர் பகுதியில் பணியாற்றும் சில சார் பதிவாளர்கள் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கும்போது மேலிடத்து ப்ரஸ்ஸர் என்று கூறினால் மக்களுக்கு யார் மீது கோபம் வரும் என்பதை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உணரவேண்டும் என்று திராவிட கட்சி தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் பதிவுத்துறை அமைச்சர் பெயரை சொல்லி மேலிடத்து ப்ரஸ்ஸர் என்று கூறி பணம் வாங்கினால் மாவட்ட ஆட்சியர் அமைச்சரின் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அறியும்படி ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும் அப்படி இல்லையென்றால் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு மாதம் மாதம் லட்ச கணக்கில் டார்கெட் வைத்த சம்பவத்திற்கும் திமுக ஆட்சியின் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்பதை மக்கள் ஆழமாக நம்பிவிட்டால் அடுத்த தேர்தலில் திமுகவிற்கு அரியலூர் பெரம்பலூர் பகுதியில் பெரும் ஆபத்து இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்... விழித்து கொள்வாரா மதுரை மைந்தன் அமைச்சர் மூர்த்தி ..?
Comments
Post a Comment