தருமபுரிக்கு வரும் துணை முதல்வர் உதயநிதியே அதிமுக ஆட்சியில் கடத்தூர் பேரூராட்சியில் பிளாட் போடும் முறைகேட்டில் திமுக வும் உடந்தை என்ற லட்சணத்தை பாமக கிழித்து தொங்க விட்டு வருகிறது....மோசடியில் ஈடுபட்ட முன்னாள் EO நாகராஜன் முன்னாள் கிராம அலுவலர் திமுக நிர்வாகிகள் மீது திமுக என்ன நடவடிக்கை எடுக்க போகுது...??? அதாவது நீங்கள்..!

 தருமபுரி மாவட்டத்தில்   கடந்த மூன்று வருடங்களாக சுமார் பல்லாயிர கணக்கான   விவசாய நிலங்களை அழித்து பிளாட் போட்டு முறைகேடாக DTCP - ( Directorate Of Town And Country Planning ) "நகர் ஊரமைப்பு இயக்கம்" அனுமதி பெற்று மக்களை ஏமாற்றி நிலங்களை விற்று வரும் மோசடி கும்பலுடன் அரசு அதிகாரிகளும் சேர்ந்து மோசடி செய்யும் கேவலமான வேலைதான் 2026 - இல் திமுகவிற்கு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பெரும் தலைவலியாக இருக்க போகிறது.. 
தருமபுரி மாவட்டத்தில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இன்னும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் ஒடுக்கபடுகின்ற மக்கள் நடப்பதற்கு சாலை வசதிகள் இல்லாமல் 
தவித்து வரும் மக்களின் சூழலை  செய்திகளில் படித்து நொந்து போய் வருவாய் துறையினரிடம் சமூக ஆர்வலர்கள்  மனு கொடுத்து சாலை வசதி ஏற்படுத்தி கொடுங்கள் என அதிகாரிகளிடம் கேட்டால் மனுக்களை பெற்று நாட்களை கடத்தி மனு கொடுத்தவர் சுடுகாட்டிற்கு செல்லும் வரை அரசு அலுவலகத்தில் மனுக்கள் கறையான் பிடித்துக்கொண்டிருக்கும்.  இப்படிபட்ட  கேவலமான செயல்பாடு தருமபுரியில் நடக்கிறது அப்படிப்பட்ட ஊருக்கு வருகை தரும் தமிழக துணை முதல்வரே வருக..!! 

மக்களுக்கு வேலை செய்யாத அரசு அதிகாரிகள் கடந்த 2018 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக  DTCP - ( Directorate Of Town And Country Planning ) "நகர் ஊரமைப்பு இயக்கம்" அனுமதி பெறுவதற்கு மாவட்ட  DTCP அலுவலகம் இணைந்து  செயல்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற இந்த மோசடி வேலைக்கு திமுக என்ன பலி ஆடா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

காரணம் இந்த மோசடிகளை கடத்தூர் பேரூராட்சி - திமுக தலைவர் கேட்கவில்லை ஒரு வேலை அவரும் உடந்தையாக இருக்கலாம் என ஒருபக்கம் விவசாயத்திற்கு குரல் கொடுக்கும் பாட்டாளி சொந்தங்கள் திமுக மீது விமர்சனம் வைக்கின்றனர் 
இந்த சமுகத்தில் வாழும் மக்கள் குறைந்த விலையில் நிலம் கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் நாம் வாங்கும் நிலத்திற்கு சாலை வசதிகள் இருக்கா..? சாக்கடை வசதிகள் இருக்கா..? அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து வாங்குவதில்லை இப்படிபட்ட மக்களை கண்கானித்துதான் கடத்தூர் பேரூராட்சி பகுதியில் இருக்கும் பத்திர பதிவு அலுவலகத்திற்கு அருகில் வழித்தடமே இல்லாத சுமார் 400 பிளாட்டுக்களை வழித்தடம் உள்ளது, சாக்கடை வசதிகள் உள்ளது, என்று கூறி மக்களை ஏமாற்றி நிலங்களை விற்று வருகின்றனர். இதற்கு முக்கிய புள்ளி முனவர் பாஷா என்று கூறப்படுகிறது.
மேலும் இதற்கு 400 பிளாட்டுக்கு செல்ல வழித்தடம் இல்லையென்ற சூழல் இருந்த போது சிறு மலைக்குன்றை உடைத்து வருவாய் துறையினர் வழிப்பாதை அமைத்து கொடுத்துள்ளனர். ஆனால் அப்பகுதியில் எத்தனையோ கிராமங்கள் குடியிருப்பு வாசிகள் வழித்தடம் இல்லாமல் சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் போராடி   வருகின்றனர். 

அவர்களுக்கு எந்த ஒரு தீர்வு காணாத அதிமுக ஆட்சியில் இருந்த அதிகாரிகளால் தற்போது கடத்தூர் பகுதியில் திமுக விற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். காரணம் முனவர் பாஷா விற்ற 400 பிளாட்டுகளில் சாக்கடை வசதிகள் கிடையாது சரியான தார் சாலை கிடையாது எதிர்காலத்தில் அப்பகுதியில் மக்கள் அதிகமாக குடிபெயர்ந்தால் யார் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.??  

இப்படி இருக்கும் பட்சத்தில் கடத்தூர் பேரூராட்சி பின் புறம் உள்ள சுமார் 150 பிளாட் போடும் அளவிற்கு விவசாய நிலங்கள் சமநிலை செய்து நிலத்திற்கு அடியில் உள்ள கருங்கர்களை வெட்டி எடுத்து சுமார் 10 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த முறைகேட்டில் கடத்தூர் பேரூராட்சி, மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் இப்படி முறைகேடாக பிளாட்டுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது இதனை தட்டி கேட்காமல் கடத்தூர் திமுக நிர்வாகிகளே கப் சிப் என்று இருக்காங்கன்னா திமுக வும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைதான் என பாமக நிர்வாகிகள் பொளந்து கட்டுகின்றனர்.
 இது போன்ற சம்பங்களில் வருமானவரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை , அமலாக்கத்துறை தானாக முன் வந்து  வழக்கு  பதிவு செய்தால் பலகோடி மோசடி நடந்திருக்க வாய்ப்பிருக்கும் என்றும்  முக்கியமாக முன்னாள் கடத்தூர் Eo மற்றும் கிராம அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

டிசம்பர் 6 இல் தருமபுரிக்கு வரும் துணை முதல்வர் உதயநிதியே அதிமுக ஆட்சியில் முறைகேடாக பட்டா போட்ட முனவர் பாசாவிற்கு கடத்தூர் பேரூராட்சி  திமுக நிர்வாகிகளும் உடந்தை என்ற ஊழல் லட்சணத்தை உணர்த்துகிறது இந்த சம்பவம்.. ம்ம் என்னத்த சொல்ல மேல பாமக சொன்னது உண்மையோ என்னவோ...!!
சம்பந்த பட்ட அதிகாரிகள்  மீது  திமுக ஆட்சி என்ன நடவடிக்கை எடுக்க போகுதுன்னு தெரியலையே

தருமபுரிக்கு வரும் துணை முதல்வர் உதயநிதியே அதிமுக ஆட்சியில் கடத்தூர் பேரூராட்சியில் பிளாட் போடும் முறைகேட்டில் திமுக வும் உடந்தை என்ற லட்சணத்தை பாமக கிழித்து தொங்க விட்டு வருகிறது....மோசடியில் ஈடுபட்ட முன்னாள் EO நாகராஜன் முன்னாள் கிராம அலுவலர் திமுக நிர்வாகிகள் மீது திமுக என்ன நடவடிக்கை எடுக்க போகுது...??? அதாவது நீங்கள்...!!

Comments