அரூர் பேருந்து நிலையத்தில் ஆம்பளையும் பொம்பளையும் கழிவறைக்கு ஒண்ணா போங்க... எஞ்சீனியரை வெளுத்து வாங்கிய அரூர் மேஸ்த்திரிகள் - துண்ட காணோம் துணிய காணோம் என தப்பித்து ஓடிய என்ஜினியர்.


அரூர் பேருந்து நிலையத்தில் ஆம்பளையும் பொம்பளையும் கழிவறைக்கு  ஒண்ணா போங்க... எஞ்சீனியரை வெளுத்து வாங்கிய அரூர் மேஸ்த்திரிகள் - துண்ட காணோம் துணிய காணோம் என தப்பித்து ஓடிய என்ஜினியர்.


தான் படிக்காத ஒரு மேஸ்திரி, என்னை விட்டுப் பாருங்கள் ஸ்கெட்ச் எப்படி போடுகிறேன் என படித்த ஒரு இன்ஜினியரை பார்த்து கேள்வி கேட்ட நபர் : துண்ட காணோம் துணிய காணோம் என தப்பித்து ஓடிய என்ஜினியர்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர்கள் K.N.நேரு, MRK பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். புதிதாக கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்திற்கான பணிகள் முழுமையாக முடிவு பெறாத நிலையில் அவசரகதியிலேயே திறந்து வைக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

குறிப்பாக ஆண் பெண் இருபாளருக்கும் தனித்தனியாக கழிவறை கட்டிடங்களை கட்டாமல் ஒரே கழிவறை கட்டிடத்தில் இருபாலரும் பயன்படுத்தும் வகையில் கட்டிட அமைப்பு, இருப்பது மக்களிடையே ஒரு அதிர்ச்சியையும் கேள்விக்குறியையும் எழுப்பி உள்ளது. பேருந்து நிலையம் செயல்படாத நிலையில் அங்கு தீண்டாமை சுவர் அமைப்பதாக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடத் தொடங்கினர். அப்போது சுற்றுச்சுவரை  கட்ட அனுமதிக்க மாட்டோம்  என மக்கள் தெரிவித்தனர். 

அப்போது அங்கு இருந்த இன்ஜினியரை பார்த்து மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தான் ஒரு படிக்காத மேஸ்திரி, என்னை விட்டுப் பாருங்கள் ஸ்கெட்ச் எப்படி போடுகிறேன், பாத்ரூம் கட்டிடத்திற்கு ஸ்கெட்ச் போட்டு வடிவமைத்தவர் நீங்கள் தானே என கேட்ட கேள்விக்கு அங்கு இருந்த என்ஜினீயர் துண்ட காணோம் துணிய காணோம் என தப்பித்து ஓடியினார்.

Comments