தேர்தல் ஓட்டுக்கு மட்டும்தான் அரூர்..! - மத்த நேரத்தில் டுபாக்கூரு..! சுற்றுலாத்துறை அமைச்சர் சுற்றுப்பயணம் - திமுகவின் நன்றி விசுவாசம்..??? - அதிகாரிகளின் ரூட்டால் பாழாய் போகும் திமுகவின் ஆட்சி...!


மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தர்மபுரி மாவட்ட நிர்வாகம்

அமைச்சர்கள் பார்வை அரூர் பகுதி மீது படுமா?

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஏதோ..?

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம் போன்ற பகுதியில் உள்ள நிலப்பரப்பு மட்டும் உள்ளது போலவும்

அரூர் & பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிகளை வேறு மாவட்டத்தில் உள்ளது போலவும் சில காலங்களாக நடந்து கொள்ளுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆளும் திமுகவிற்கு பக்க பலமாகவும் நல் ஆட்சிக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளவர்கள் தான் அரூர் & பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்களின் எண்ணமும் செயலும் உள்ளது, 


நல் ஆட்சிக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளவர்கள் தான் அரூர் & பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்களின் எண்ணமும் செயலும்உள்ளது

ஆனால் மாவட்ட நிர்வாகத்தில் சில தவறுதலாக வழி காட்டும் உயர் அதிகாரிகள் எண்ணம் முழுவதும் மாநில அமைச்சர்கள் கடந்த 3 வருட தருமபுரி சுற்றுபயண திட்டங்களை தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு போன்ற பகுதிகளில் மட்டுமே சுற்றுப்பயணங்களாக வைத்துக் கொண்டு திட்டங்களை வகுத்து வருகின்றனர். கண்துடைப்பிற்கு ஏதோ ஒரு நிகழ்ச்சியை மட்டும் பாப்பிரெட்டிப்பட்டி அரூர் பகுதியில் நடத்தி வருகின்றனர்.

நல்லாட்சி தரும் திமுகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர் உயர் அதிகாரிகள்

பாப்பிரெட்டிப்பட்டி & அரூர் பகுதியில் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கான புதுப்புது பகுதிகள் ஏராளமானவை உள்ளனர் உதாரணத்திற்கு

சித்தேரி, பாப்பிரெட்டிப்பட்டி வாணி ஆறு அணை, தென்கரைக்கோட்டை என பல்வேறு இடங்கள் உள்ள நிலையில்

அவை எதையும் மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் திட்டமிட்டு செயல்படுகின்றன

மேற்கு வாழட்டும்

கிழக்கு தேயட்டும்

என திட்டமிட்டு திமுக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சில உயர் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்

எனவே தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி திமுகவிற்கு எப்போதுமே முழு ஆதரவை வழங்கி வரும் பாப்பிரெட்டிப்பட்டி ம அரூர் பகுதி மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சி அடைய ,வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட முழுவதும் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக

குறிப்பிட்ட தொழிற்சாலையோ, சுற்றுலா தளமும் இல்லாத அரூர் & பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் தனி கவனம் செலுத்தி ,

வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தால் மட்டுமே

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட ,பாட்டாளி வர்க்கங்கள் பாப்பிரெட்டிப்பட்டி & அரூர் பகுதியில் வளர்ச்சியை எட்ட முடியும் அமைச்சர்களின் பார்வை அரூர் பகுதிக்கு

திரும்புமா

அல்லது ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உயர் அதிகாரிகள், திருந்துவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம் ??

Comments