பொம்மிடி அருகே டாஸ்மார்க் கடை எங்கள் ஊருக்கு வேண்டாம் தொடர் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள் பின்னணியில் - தனியார் மதுபான கடை நடத்தி வரும் பாமக பிரமுகர் - திடுக்கிடும் தகவல்


தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பையர் ந த்தம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது

இந்தக் கடையால் அந்தப் பகுதியில் அமைதி சீர் கெட்டதுடன், பகுதி மக்களுக்கு பெரும் தொல்லையாக மாறியது

கடந்த 3 ஆண்டுகளாக இந்த மதுபான கடையை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களை கையில் எடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்

இந்த போராட்டத்திற்கு 3 முறைக்கு மேலாக இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமியும் நேரில் களம் கண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.


ஒரு வழியாக டாஸ்மார்க் நிர்வாகம் தற்போது அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்று முடிவுக்கு வந்துள்ளது

இதை அடுத்து முதல் தேர்வாக பையர் நத்தம் அருகில் உள்ள கதிரபுரம் பகுதியில் தேர்வு செய்தனர்.


அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த இடத்தில் மதுபான கடை திறக்கும் திட்டத்தை டாஸ்மார்க் நிர்வாகம் கைவிட்டது

அடுத்த கட்டமாக இந்த கடையை பொம்மிடி அருகே உள்ள கோட்டைமேடு என்ற இடத்தில் டாஸ்மார்க் கடை திறக்க முடிவெடுக்கப்பட்டு தனியார் நிலத்தில் கடைக்கான கட்டுமானங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. 

இதை அறிந்த இப்பகுதி பொதுமக்கள் பாமகவின் ஆசியோடு மாவட்ட பொறுப்பாளர் அரசாங்கம் மற்றும் மாவட்ட பாமகவின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்களும் இந்த போராட்டத்திற்கு நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்


தொடர் போராட்டத்தை கையில் எடுத்திருக்கும் இப்பகுதி மக்களுக்கு தீவிர ஆதரவு தெரிவிக்கும் பாமகவினர்

பொம்மிடி பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் 8 வார்டு பாமக கவுன்சிலரும், பாமகவின் முன்னாள் அவைத் தலைவர் பழனி தருமபுரி மெயின் ரோட்டில் தங்கவேலு ஸ்பின்னிங் மில் அருகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மதுபானங்களை கள்ளத்தனமாக வாங்கி   கடை நடத்தி வருவது தெரியாதா என போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சில பெண்களே கேள்வி எழுப்புகின்றனர். 


அரசு மதுபான கடைகள் பல்வேறு இடங்களுக்கு இடம் மாறிய போதும் ப.ம.க.பழனி கடை மட்டும் 1 ஆண்டுகளாக ஒரே இடத்தில் செயல்படுகின்றது

அரசு மதுபான கடைக்கு நிகராக ஒரு நாளைக்கு ஆயிரம் பாட்டில் வரை விற்கும் அளவிற்கு ஒரு மதுபான கடையை இப்பகுதியில் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் எப்படி நடத்த முடிகிறது என்ற கேள்வியை பொதுமக்கள் வெளிப்படையாக கேட்கின்றனர்

இப்பகுதி  லோக்கல் காவல்துறையின்  நல்லாசியோடு, ,கலால் துறையினருக்கு கவனிப்போடு , மாவட்ட காவல்துறையின் போராதரவோடுவெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார் ப.ம.க. பழனி அவ்வப்போது கண் துடைப்பிற்கு சிறு வழக்குகளை மட்டுமே சந்தித்து வருகிறார்


ஏற்கனவே பொம்மிடி பகுதியில்  தனியார் மதுபான கடையை பாமக பிரமுகர் பழனி நடத்தி வரும் நிலையில் ,இந்த கடைக்கு எதிராக பாமகவினர் எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனத்தில் மர்மம் இருக்கின்றது பணமும் இருக்கின்றது.

அது என்னவென்றால்  பழனிக்கு எதிராக அரசு மதுபான கடை இப்பகுதியில் வைத்தால், நமது கட்சிக்கு ப.ம.க.பழனி மூலம் நமக்கு வரவேண்டிய கட்டிங் வராமல் போய் விடுமோ ? என்ற அச்சத்தில் உள்ளனர். தற்போது அதற்காக வே கோட்டைமேடு மதுபான கடைக்கு ப.ம.கவினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்


தனியார் மதுபான கடை நடத்தி வரும் பழனியிடம் பணத்தை பாமகவினர் பெற்றுக் கொண்டு , ஆசீர்வதிப்பதும்,அமைதி காப்பதும், எந்த விதத்தில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்


மதுவிற்கு எதிராக போராட்டத்தை கையில் எடுக்கும் பாமகவின் ரெட்டை வேஷம் இதுதானா ?என பொது நிலையினர் கேள்வி எழுப்புகின்றனர்


எல்லாம் அரசியல் நாடகம் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

Comments