பள்ளி வாகனமும் ஏரி மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மோதிய விபத்து குறித்து டிப்பர் லாரியின் ஓட்டுனர் பேசிய ஆடியோ : ஏரி மண் விவசாய நிலங்களுக்கு பயன்படுகிறதா அல்லது விவசாயம் அல்லாத தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடிய பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் டிப்பர் லாரியில் ஏற்றி வந்த ஏரி மண், சின்னாங்குப்பம் ஏரியில் இருந்து அரூர் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். 

குறிப்பாக ஏரி மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் அரூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஒரு சில ஏரிகளில் மண்ணை அள்ளி விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் ஒரு சில நபர்கள் முறைகேடாக ஏரி மண்ணை கொண்டு சென்று விவசாயம் அல்லாத தேவைகளுக்கு, வீட்டுமனை விற்பனை செய்யக்கூடிய பிளாட்டுக்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து நாம் ஏற்கனவே செய்து வெளியிட்டிருந்தோம். இருந்த போதிலும் டிப்பர் லாரியின் உரிமையாளர் ஏரி மண் ஏற்றி சென்று கொட்டுவது குறித்து பேசிய ஆடியோவால் ஏரி மண் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா அல்லது விவசாயம் அல்லாத தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஏரி மண் அள்ளுவது குறித்து விசாரணை செய்து முறைகேடில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Comments