ஒகேனக்கல் காவிரி நீர் வந்தாலும் தருமபுரியில் தண்ணீருக்காக போராடத்தான் வேண்டும் போலவே...மக்கள் பிரச்சனைக்கு தீர்வு எப்போது மக்களுடன் முதல்வரே...?
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பிசெட்டிப்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் ஏராளமானோர் காலி குடங்களை சாலையில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு : பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கடத்தூர் அருகே உள்ள பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் அவதியிற்று வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறை காரணமாக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் முறையாக தண்ணீர் வழங்கவில்லை என பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
குடிநீர் பற்றாக்குறையால் பள்ளி குழந்தைகள் வேலைக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரூர் கடத்தூர் செல்லும் சாலையில் காலி குடங்களை வைத்து சாலையில் அமர்ந்து கோஷங்களிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை சாலை மறியலில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
அப்போது பேட்டியளித்த இந்துமதி என்பவர் பல மாதங்களாக தங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை நிலவி வருவதால் அனைவரும் மிகுந்த சிரமப்பட்டு வருவதாகவும், குடிநீர் மட்டுமல்லாமல் தங்களுக்கு வாழ்வதற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு இந்த பஞ்சாயத்து நிர்வாகம் முன் வருவதில்லை என தெரிவித்தார்.
பேட்டி : இந்துமதி
Comments
Post a Comment