விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் பேனர்கள் கிழிப்பு : விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தொண்டர்களால் பரபரப்பு.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் பேனர்கள் கிழிப்பு : விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தொண்டர்களால் பரபரப்பு.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் கட்டப்பட்டிருந்த விடுதலை செய்திகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் பேனர் கிழிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவனின் பிறந்தநாள் விழா பல்வேறு பகுதிகளில் அக் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் பொது இடம் மற்றும் சாலை ஓரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களால் பேனர்கள் கட்டப்பட்டுள்ளன.
மர்ம நபர்கள் இந்த பேனரை கிழித்துச் சென்றுள்ள தகவலை அறிந்த அக்கட்சியினர் பேனரை கிழித்து சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் பேனரை கிழித்த மர்ம நபர்கள் யார் என விரைந்து விசாரித்து அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததின் பெயரில் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். மேலும் இன்று மாலை நேரத்திற்குள் அந்த நபரை கைது செய்யவில்லை என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும், அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆராய்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
Comments
Post a Comment