பாப்பிரெட்டிப்பட்டியில் வட்டாட்சியர் கையெழத்து, அரசு முத்திரை போலியாக தயாரித்து பத்திரப்பதிவு செய்யும் முயற்சி...! சந்திரன் தலைமறைவு - காவல்துறை வலைவீச்சு


வாலிபர் மற்றும் வயதான முதியவருக்கு போலீஸ் வலை வீச்சு

பாப்பிரெட்டிப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வட்டாட்சியரின் ஒப்புதல் போலிச் சான்றிதழை தயாரித்து பத்திரப்பதிவு செய்ய முயற்சி செய்த வாலிபர் மற்றும் வயதானவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி பகுதியை சார்ந்த வயதானவர் கோபால் வயது 86 இவருக்கு சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்ய பாப்பிரெட்டிப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அருகே எழுத்தாளராக அலுவலகம் வைத்து நடத்தி வரும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சார்ந்த சந்திரன் வயது 38 என்பவரை அணுகியுள்ளார்

அதற்கு சந்திரன் பெரியவரிடம் உங்களின் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வட்டாட்சியரின் ஒப்புதல் சான்றிதழ் தேவைப்படுகிறது, நான் பேசி அதிகாரியிடம் வாங்கித் தருகிறேன் அதற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் செலவாகும் எனக் கூறி அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுள்ளார். பின்பு பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் கையொப்பம் மற்றும் அரசின் கோபுர முத்திரையையும் பதித்து போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த 24ஆம் தேதி பத்திரப்பதிவிற்காக அலுவலகத்தில் வைத்துள்ளார் இந்த பத்திரப்பதிவு செய்ய வட்டாட்சியரின் போலி சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவு அலுவலர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதன் பேரில் பத்திரத்தை சரிபார்த்த பத்திரப்பதிவு அலுவலர் சரவணன் அவற்றில் வட்டாட்சியின் ஒப்புதல் சான்றிதழ் போலியாக இருக்குமோ? என சந்தேகத்தின் பேரில் வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஆவணங்களை சரி பார்க்கும்படி கேட்டுள்ளார்

அதன் பேரில் வட்டாட்சியர் சரவணன் சான்றிதழை வாங்கி சரி பார்த்தபோது அது தனது கையெழுத்து இல்லை எனவும் அரசு முத்திரையை போலியாக பயன்படுத்தி சீல் விட்டுள்ளதாகவும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்

உடனடியாக இச்சம்பவம் குறித்து ஏ. பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார், இதன் பேரில் போலி சான்றிதழ் மூலம் நிலப் பதிவு செய்ய முயன்ற இருளப்பட்டி சார்ந்த வயதான முதியவர் கோபால் வயது 86 மற்றும் போலி அரசு முத்திரை வட்டாட்சியர் கையொப்பம் தயாரித்து கொடுத்த பத்திர எழுத்தாளர் சந்திரன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த காவல் உதவி ஆய்வாளர் கேக் வாட் இரு நபர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

அரசு முத்திரையையும் வட்டாட்சியர் கையெழுத்தையும் போலியாக பத்திரப்பதிவு தயாரித்து  தவறாக பத்திர பதிவு முயற்ச்சியில் ஈடுபட்ட சம்பவம்  பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Comments