அதிகாரப்பட்டியில் சாலைகள் ஆக்கரமிப்பு திணறும் மாரியம்பட்டி கிராம மக்கள் - நடவடிக்கை எடுக்காத வருவாய் துறையினர்.!! பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகே மாரியம்பட்டி மக்களும் கோவில் கட்டினாள் என்ன நடக்கும் என்பதை உணருங்கள்...??


 என்னதான் ஒரு மனிதன் ஒருவனுக்கு அள்ளி கொடுத்தாலும் பக்கத்தில் இருக்கறவனின் தட்டை பார்த்து பிடிங்கி திங்க பேராசையும் பொறாமையும் கொண்ட அடங்காத மனித பிறவிகள் உண்டு. அந்த அடங்காத மனித பிறவிகளை சரியாகவும் சட்ட ரீதியாகவும் களை எடுக்க ஒரு அதிகாரிகள் கூட துணிச்சலாக செயல்படுவதில்லை ஒரு சில சமூக ஆர்வலர்களும் சாலை வசதிகள் மற்றும் சாக்கடை வசதிகள் அமைக்க முடியாமல் அந்த வசதிகள் இல்லாத பாதிக்கப்பட்ட பொதுமக்களாலும் குடியிருக்கும்  மக்களாலும் எழும் புகாரால் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வருகின்றனர்.

 ஆனால் அதற்கு முன்னதாகவே எந்தெந்த பகுதியில் அரசு நிலங்கள் சாலைகள் புறம்போக்கு நிலங்கள் ஆற்று நிலப் பகுதி ஆக்கரமிப்பு செய்யப்படுகிறது என்பது பற்றி முழு தகவல்களும் கிராம அலுவலர் முதல் வட்டாட்சியர் அலுவலர் வரை யாவரும் அறிந்ததே. 


ஆனால் அப்படி தகவல் கிடைக்கும் பட்சத்தில்  எந்த ஒரு  நடவடிக்கையும் எடுக்காமல் மக்களின் உழைப்பில் வயிற்றை நிரப்பி கொள்ளும் அதிகாரிகளின் சுயநலத்தால் பல்வேறு இடங்களில் ஒரு சில பிரச்சினையாக உருவாகி ஊர் பிரச்சனையாக உருவெடுத்து அது சாதி கலவரத்தில் கலவரம் வெடிக்க ஆரம்பிக்கிறது.. அப்போது எங்கேயோ இருந்து விடுமுறை கிடைக்காமலும் சொந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலும் உடல் ரீதியான ஆரோக்கியத்தை இழந்தும் உயர் அதிகாரிகள் கூறிவிட்டனர் என்பதற்காக  காவல்துறை தங்களுடைய ஆரோக்கியத்தை இழந்து ஒன்றும் அறியாமல் அந்த கலவரத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டு மக்களை அமைதிப்படுத்தி வீட்டிற்கு அனுப்பும் வரை  காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள்.



காவல்துறைக்கு பெரும் சிரமத்தையும் பெரும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதற்கு மிக அடித்தளமாக இருப்பது ஒரு பக்கம் வருவாய்த்துறையின் செயல்பாடே ஆகும்.  எடுத்துக்காட்டு தான் இந்த சம்பவம்..! 


அப்படிப்பட்ட சம்பவம் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த செய்தியின் எச்சரிக்கையான குறிப்பு. 


 தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அதிகாரப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரியம்பட்டி கிராமமானது சுமார் 800 குடும்பங்களுடன் 1400 மக்கள் தொகை கொண்ட ஊராக கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் படிப்பறிவு கொண்டவர்களாகவும் அதில் 70 க்கும் மேற்பட்ட நபர்கள் அரசு ஊழியர்களாகவும் உள்ளனர்.  தருமபுரியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் இருந்தும் இந்த மாரியம்பட்டி கிராமத்திற்கு பேருந்து வசதிகள் இல்லை.  இதனால் இங்க உள்ள படித்த இளைஞர்கள் வேலைக்கு போகும் பொதுமக்கள், பெண்கள் என பலபேர் பெருமளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை உணர்ந்த எவிடன்ஸ் பார்வை செய்தி நிறுவனம் இந்த கிராமத்திற்கு பேருந்து  வசதி வேண்டுமென இரண்டுமுறை தருமபுரி போக்குவரத்து துறைக்கும்,  கடந்த சென்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்களிடமும் சேலம் போக்குவரத்து மேலாளரிடமும் மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு பயனும் இல்லாமல் போனது. காரணம்  என்ன என்று ஆய்வு



செய்த போது அதிகாரப்பட்டி வழியாக மாரியம்பட்டி கிராமத்திற்கு செல்லும்  பாதை முழுவதும் ஆக்கரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் கூட்டுறவு சங்கம் வங்கி அலுவலகத்தின் அருகில் உள்ள அய்யனார் கோவில்  வாசல் சாலைகளை ஆக்கரமிப்பு செய்துள்ளதாலும் வளைவு பகுதி என்பதால் பேருந்து கல்லூரி வாகனம், என  பல்வேறு வாகனங்கள்  வளைவில் வளைய முடியாமல் சிக்கி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது இதனால்தான் மாரியம்பட்டி  கிராமத்திற்கு பேருந்து வசதிகள் கொண்டு வரமுடியவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிய படுத்துகின்றனர்.


 இதுகுறித்து மாரியம்பட்டி இளைஞர்கள் ஒன்று திரண்டு அதிகாரப்பட்டி 4 ரோடு சாலையில் இருந்து மாரியம்பட்டி கிராமம் வரை

 சாலையை அளக்க வேண்டும் என வட்டாட்சியர் மற்றும் கிராம அலுவலரிடம் கூறியதால் சாலைகையை அதிகாரிகள் அளந்து காட்டினர். 


அப்போது சாலையை ஆக்கரமிப்பு செய்தவர்கள் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அளப்பதை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். பிறகு அ. பள்ளிப்பட்டி காவல் துறையினர் பேச்சி வார்த்தை நடத்தி அங்கே இருந்த கூட்டத்தை கலைத்தனர். 


காரணம் மாரியம்பட்டி கிராமத்திற்கு பாதையை அகலப்படுத்த கூடாது என்பதற்காகவே சில சாதி வெறி கொண்ட நபர்கள்   பிரச்சனைகளை தூண்ட ஆரம்பித்தனர்.  


இந்த சம்பவங்களால்தான் மாரியம்பட்டி மக்கள் பேருந்து வசதிகள் இல்லாமல் பெரும் போராட்டத்தில் சிக்கி தவிக்கின்றனர்.

தேவை இல்லாத கற்கள், மண் குப்பைகள், கோவில் வழிபாட்டு தளத்திற்காக சாலைகள் ஆக்கரமிப்பு  என ஒரு சார்ந்த மக்களை ஒடுக்கும் செயல் என கேடு கெட்ட செயல் இப்பகுதியில் அரங்கேற்றி வருகிறது. இப்படி இருப்பதால் மாரியம்பட்டி கிராம மக்களும் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு முன்பாக கோவில் கட்டலாம் என முடிவெடுத்து வருகின்றனர். பஞ்சாயத்து அலுவலகத்தின் இடத்தில் கடைகளை கட்டி பொது  மக்களுக்கு வாடகை விட்டு பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு கூடுதல் பணம் சம்பாதிக்க திட்டமிடாமல் அங்கே ஒரு சில சாதியை சேர்ந்த மக்களுக்கு மட்டும் கோவில் கட்டி வழிபாடு செய்ய கிராம அலுவலர், பஞ்சாயத்து நிர்வாகம், வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் அனுமதி தந்தது போல் மவுனம் காத்தால் 


இங்கே எதிர்காலத்தில் கலவரம் உருவாகும் என காவல் துறையினர் மற்றும்  சமூக ஆர்வலர்கள் தரப்பில் மட்டுமே யூகிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு அதிகாரிகளும் தயவு செய்து வாங்கும் சம்பலத்திற்காக  மனசாட்சிக்கு உட்பட்டு ஒவ்வொரு கிராம வளர்ச்சிக்கு சாலை வசதிகள் கண்டிப்பாக தேவை என்பதை உணர்ந்து இது போன்ற கிராமங்களில் வழித்தடம் இல்லாமல் பேருந்து வசதிகள் கிடைக்காத மக்களுக்கு நிலம் ஆக்கரமிப்பு செய்த மக்களிடமிருந்து அரசு நிலங்களை மீட்டு வழித்தடம் அமைத்து ஊர் வளர்ச்சிக்கு உதவி கிராமங்களை அமைதி படுத்த வேண்டும் என்பதே இந்த கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது. 


நாங்கள் ஆண்ட சாதி பேண்ட சாதி என சொல்லிக் கொண்டு அரசு நிலங்களை  ஆக்கரமிப்பு செய்து வழிபாட்டு தளங்களை கட்டும் போது அதனால் பாதிக்கப்படும் மக்கள் அதாவது இப்பகுதியில் உள்ள மாரியம்பட்டி கிராம மக்களும் வழிபாட்டு தளங்களை கட்டினால் என்ன நடக்கும் என்பதை வருவாய்த்துறை உணரவேண்டும், காவல் துறை அல்ல..! 


அனைத்தையும் வேடிக்கை பார்த்துகொண்டு இறுதியில் கலவரம் ஏற்படும் போது மட்டும் காவல் துறையை நாடி நல்லவர்களை போல வேசம்கட்டி வாழும் சில வருவாய்த்துறையினர் மீதுதான் குற்றமும் தண்டனையும் விதிக்கப்படனுமே தவிர பொதுமக்கள் மீதும் காவல் துறை மீதும் அல்ல என்பதை மாநில உளவுத்துறை, காவல் துறை மாவட்ட ஆட்சியர்கள் புரிந்து கொள்ளவேண்டும். 

இந்த செய்தி சமூக வளர்ச்சிக்காக மட்டுமே தவிர வேறு எந்த உள் நோக்கமும் இல்லை. அப்படி உங்களுக்கு தவறாக இந்த செய்தி இருந்தால் உங்களுக்குள் ஆதிக்க  எனும் கொடூர புற்று நோய் உள்ளது. என்பதே இக்கட்டுரையின் வெளிச்சம்

Comments