கவரிங் நகைகள் வைத்து கனரா வங்கியில் பல லட்சங்களை ஆட்டைய போட்ட வங்கி ஊழியர்....??? இதுக்கு கெக்ரான் மெக்ரான் கம்பெனிக்கு போலாம்...

பொம்மிடி - கனரா வங்கியில் கையாடல்! -- கண்டு கொள்ளாத நிர்வாகம்!
கேள்விக்குறியில் நம்பகத் தன்மை?
      
      தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடியில் உள்ள கனரா வங்கி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியாகும். இதன் தலைமையகம் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் அமைந்துள்ளது. இந்திய அரசு 19/07/1969 அன்று கனரா வங்கி உள்ளிட்ட 13 வங்கிகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளாக மாற்றியது. 1976 ஆம் ஆண்டு கனரா வங்கி தனது 1000 --மாவது கிளையைத் திறந்தது. இதன் மொத்த சொத்துக்களின் மதிப்பு 15,35,018 கோடியாக(2024) உள்ளது. மார்ச் 2022 கணக்கின்படி 86,919 ஊழியர்கள் கனரா வங்கியில் பணியில் உள்ளனர். ஆகவே இந்திய அளவில் ஆயிரக்கணக்கான கிளைகளைக் கொண்டு மக்களின் நன்மதிப்பை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 
     
      ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக  பொம்மிடியில் உள்ள கனரா வங்கி கிளையில் நடைபெற்ற கையாடல் சம்பவம் ஆதாரத்துடன் பிடிபட்டுள்ளது.

       பொம்மிடியில் உள்ள கனரா வங்கியில் பல ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை வாடிக்கையாளர்களாகக் கொண்டு நாள்தோறும் தொழில்கடன், வீட்டுவசதிக்கடன், பயிர்கடன், தனிநபர்கடன், நகைகடன் உள்ளிட்ட கடன்களைப் பெறுவதும் வங்கியில் முதலீடு செய்வதுமாக அதிக அளவில் வரவுசெலவு செய்து வருகிறது. இந்த பகுதியில் ரெயில்வே ஜங்ஷன் உள்ளத்தாலும், வர்த்தகம் சிறப்பாக நடைபெறுவதாலும் எப்பொழுதும் இது பரபரப்பாகவே செயல்பட்டு வருகிறது. 

      இந்த நிலையில் அதன் ஊழியர்கள் போலியான நகைகளை அடகு வைத்து பல லட்சக்கணக்கான ரூபாய்களை கையாடல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது 
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"   -- என்பது போல சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் சண்முகசுந்தரன் என்பவர் தற்போது  வங்கியின் முதன்மை மேலாளராகவும் மற்றும் நகை மதிப்பீட்டாளராகவும் உள்ளார். இவர் இந்த வங்கியில் சுமார் 11 ஆண்டு காலமாக பணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது  

       கடந்த  03.05.2024 ஆம் தேதி இந்த வங்கியில் நகைகளை மறு மதிப்பீடு செய்யும் பொழுது இரண்டு  நகை பொட்டலங்களில் இருந்த நகைகள்  போலியானது என்று தெரியவந்துள்ளது  இதில் ஒரு பொட்டடலத்தில் இருந்த இரண்டு செயின்கள் அதனுடைய எடை 71.50 கிராம் கொண்டதும், மற்றொரு பொட்டலத்தில் இருந்த இரண்டு வளையல்கள் அதனுடைய எடை 53.4 கிராம் கொண்டதும் ஒரு செயின் 37.1 கிராம் எடை கொண்டதும்  போலியானது என தெரியவந்துள்ளது. நகை மதிப்பீட்டாளர் சண்முகசுந்தரன் என்பவர்  வாடிக்கையாளர்களிடம் இருந்து மதிப்பீடு செய்து மேற்கண்ட நகைகளை தங்க நகைகள் என்று கூறியுள்ளார் ஆகவே வங்கியில் இருந்து மொத்தம் 6,71,000 ரூபாய் கடனாக வழங்கியுள்ளனர். மறு மதிப்பீடு செய்யும் போது அதற்குரிய கடன் தொகையான 3,80,942 ரூபாய் செலுத்தி விட்டதாகவும் மேற்படி போலி நகைகளை வங்கியில் வைத்து ஏமாற்றி மோசடி செய்த சண்முகசுந்தரனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொம்மிடி கனரா வங்கியின் மேலாளர் நவநீத கிருஷ்ணன் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையும் CSR (Number --91/2024) வழங்கியுள்ளது ஆனால் காவல் நிலையத்தில்  இன்றுவரை வழக்கு பதிவு செய்யாமல் நிலுவையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை பார்க்கும் போது
"வேளியே பயிரை மேய்ந்த கதையாக" உள்ளது. 

       மேலும் இதுபோன்று போலியாக பல நகைகள் அடகு வைத்து பல லட்சக்கணக்கான ரூபாய்களை எடுத்து தனித்தனியாக அதிக வட்டிக்கு கொடுத்துள்ளதாகவும். இவை அனைத்தும் வெளியில் தெரிந்தால் அது தங்கள் வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களுக்குள் சமரசம் செய்து கொண்டு அடக்கி வாசிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகவே இதுபோல் இன்னும் எத்தனை லட்ச ரூபாய்களை மோசடி செய்திருப்பார்களோ என்று வங்கி வாடிக்கையாளர்கள் அச்சத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

     ஆகவே வங்கியின் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வங்கியில் கள ஆய்வு செய்து மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் மற்றும் வங்கி மேலாளர் ஆகிய இருவரிடமும் உரிய விசாரணை செய்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் கனரா வங்கியின் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர் 

      அரசும், வங்கியின் உயர் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? பார்ப்போம்!

Comments