பொம்மிடியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டுஅச்சுவர்ஸ் பள்ளி200 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர் முக உருவ படத்துடன் பேரணி அசத்தல்

பொம்மிடியில்  காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு
அச்சுவர்ஸ் பள்ளி200 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர் முக உருவ படத்துடன் பேரணி அசத்தல்

 பாப்பிரெட்டிப்பட்டி. ஜீலை, 16 -

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்,பொம்மிடி அருகே உள்ள சுங்கரஅள்ளியில் அச்சீவர்ஸ் அகாடமி ஆங்கிலப் பள்ளி மாணவ மாணவியர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பொம்மிடியில் முக்கிய வீதியில் வழியாக காமராஜர் முக உருவ படத்துடன் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் ஊர்வலமாக வந்தது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது 


 உலகளாவிய கல்வி நிறுவனங்களை  எம்.எம். ஐ அருட்தந்தையர்கள் வழிநடத்தி வருகின்றனர்


 இந்தக் கல்வி நிறுவனத்தின் கிளைக் கல்வி நிறுவனம் பொம்மிடி அருகே உள்ள சுங்கர ஹள்ளியின் அச்சுவேர்ஸ் அகாடமி ஆங்கிலப் பள்ளி என்ற பெயரில் கடந்த 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது


 இந்தப் பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது


வரலாற்று சிறப்புமிக்க இந்நாளில் மாணவ, மாணவியர் கல்வியின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பதாகைகள் மூலமாகவும், காமராஜரின் உருவத்தை முகங்களில் அணிந்தும் பேரணி நடத்தினர்


இந்த பேரணி பொம்மிடி பேருந்து நிலையத்திலிருந்து கடைவீதி ,ரயில் நிலையம், தர்மபுரி நெடுஞ்சாலை வழியாக தர்மபுரி ரயில்வே மேம்பாலம் வரை பள்ளி மாணவ மாணவியர் காமராஜரின் பெருமைக்குரிய நல்ல திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் முழக்கமிட்டும் ஊர்வலமாக நடந்து சென்றனர் 


இந்தப் பேரணியில் பொம்மிடி காவல் உதவி ஆய்வாளர் மாரப்பன், மற்றும்சேகர்,  மருத்துவர் மற்றும் தொழிலதிபரான ரமேஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்

 பள்ளியின் அதிபர் அருட்தந்தை ஜான் மில்லர், பள்ளியின் முதல்வர் செல்லதுரை  வாழ்த்துரை வழங்கினர்


 பின்பு பள்ளியில் கல்வியின் அவசியம் மற்றும் காமராஜரின் மனித சமூகத்திற்கு தனது வாழ்க்கை அற்பணிப்பு பற்றி ய பல போட்டிகள் பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்

Comments