பழனி கோவில் நிர்வாகத்தில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது - ஒரிஜினல் வீடியோ உள்ளே
பழனி திருக்கோயில் நிர்வாகம் நீதிமன்ற உத்தரவுபடி கிரிவலப் பாதையை அடைத்ததுள்ளதால் இதனால் கிரிவலப் பாதை நகராட்சிக்கு சொந்தமா? கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமா ? என காரசார விவாதம் - கோவில் நிர்வாகத்தில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் இன்று நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் அடிப்படை வசதிகள் குறித்து பொது மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது அப்போது பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் கூடியதால் பக்தர்கள் அவதி அடைந்து வருவதாக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு பழனி கோவில் கிரிவலப் பாதை முழுவதும் ஆக்கிரப்புகள் அகற்றப்பட்டு பின்னர் கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத அளவிற்கு அடைக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் மற்றும் கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் பழனி நகராட்சிக்கு உட்பட்டது தான் கிரிவல பாதையா ? அல்லது கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்டது தான் கிரிவலப் பாதையா? என்று கடுமையான காரசார விவாதம் நடைபெற்றது. இதில் கிரிவலப் பாதையை 1948 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் கோவில் நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்டதாகவும் அதில் கிரிவலப் பாதையை பக்தர்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கவும் பொதுமக்கள் சென்றுவர தடை இருக்கக்கூடாது என்றும் கிரிவலப் பாதையை எந்தவிதமான அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்ற நிலை உடன்படிக்கை படியே கிரிவல பாதை ஒப்படைக்கபட்டதாக தெரிவித்து கவுன்சிலர்கள் கடும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திமுக ,அதிமுக ,கம்யூனிஸ்ட் நகர மன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கையில் நகராட்சிக்கு சொந்தமானது தான் கிரிவல பாதை என்றால் நாம் ஏன் கிரிவல பாதை சுற்றி வேலி அமைக்கும் போது நகராட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் , நகராட்சி நிர்வாகத்தை குப்பை அல்லும் நிர்வாகமாக கோவில் நிர்வாகம் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் திருக்கோயில் கிரிவல பாதை தற்போது மயான அமைதியாக உள்ளது என்றும் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
மேலும் அடிவாரம் அய்யம்புள்ளி சாலை சன்னதி வீதிகளில் தடுப்பு அமைத்து பொதுமக்கள் வாகன தடைவித்துள்ள கோவில் நிர்வாகத்தை கண்டித்து தடுப்புகளை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் முடிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment