பொம்மிடி அருகே அக்கா வீட்டு நகையை ஆட்டைய போட்ட தம்பி கம்பி என்ன வைத்த பொம்மிடி காவல்துறை

பொம்மிடி அருகே

 அக்கா வீட்டு நகையை ஆட்டைய போட்ட தம்பி
 கம்பி என்ன வைத்த பொம்மிடி காவல்துறை


 தர்மபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி, துருஞ்சிப்பட்டியில் ராஜா சவுண்ட் சிஸ்டம் என்ற பெயரில் மேடை அலங்காரம் திருமண மண்டபம் ஜோடனை  ஒப்பந்தம் பணிகளை செய்து வருபவர் ரங்கநாதன் வயது 42, இவரது மனைவி புவனா



 அலங்கார தொழிலுக்கு உதவியாக இருப்பதற்காக ரங்கநாதன் தனது மனைவியின் தம்பியான பாப்பிரெட்டிப்பட்டி  மாயாபஜார் பகுதியை சார்ந்த பூவரசன் வயது 28 என்பவரை வேலைக்கு உதவியாக அமர்த்தி கொண்டார் 



இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி ரங்க நாதனின் தாயார் 2 மாதங்களாக சேலத்தில் உள்ள மீனாட்சி என்று ரங்கநாதனின் தங்கை வீட்டிலிருந்து விட்டு சொந்த ஊரான பி, துருஞ்சிப்பட்டிக்கு உள்ள வீட்டிற்கு  திரும்பியுள்ளார்



 வீட்டிற்கு வந்தவர் அவர் அணிந்திருந்த ஐந்தேகால் பவுன் கழுத்துச் செயினை சாமி படத்தின் அருகில் கழட்டி வைத்துவிட்டு குளிக்கச் சென்றுள்ளார், குளித்துவிட்டு வந்து பார்த்தவருக்கு தான் வைத்திருந்த நகை இடத்துல இல்லாதது கண்டு அதிர்ச்சியுற்றார்


 உடனடியாக அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் நகை கிடைக்காததால் வேதனையுடன் தனது மகன் ரங்கநாதனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்


 உடனடியாக வீட்டுக்குத் திரும்பிய ரங்கநாதன் நகை திருடு போனது குறித்தும், யாராகிலும் வீட்டிற்கு வந்து விட்டுச் சென்றார்களா? என்பது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார்



 விசாரணையில் தனது மனைவியின் தம்பி பூவரசன் தனது தாயார் அறையில் இருந்து வேகமாக பின்பக்க வழியாக சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்,இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாதன் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்



 இதன் பேரில் பொம்மிடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்னேஷ் திருடு குறித்து வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டார் இவருக்கு உதவியாக க்ரைம் பிராஞ்ச் போலீசாரும் குற்றவாளியை தேடும் பணியில் தீவிரம் காட்டினர்

 இந்த நிலையில் போலீசாரின் புலன் விசாரணையில் திருடு போன நகையை திருடியது ரங்க நாதனின் சொந்த மச்சானான பூவரசன் என்பது போலீசாரின் புலன் விசாரணையில் தெரிய வந்தது


 இதன் பேரில் இரண்டு லட்சம் மதிப்புள்ள ஐந்தேகால் பவுன் நகை திருடிய குற்றத்திற்காக பூவரசனை பொம்மிடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

Comments