தூய்மை பணியாளர்களை மிரட்டி தன் சொந்த வேலைக்கு பயன்படுத்தும் தருமபுரி பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூய்மை பணியாளர்களை மிரட்டி தன் சொந்த வேலைக்கு பயன்படுத்தும் தருமபுரி பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்
- மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்களை அரசு ஊழியர்கள், பஞ்சாயத்து நிர்வாகம், பொதுமக்கள் என பல்வேறு நபர்கள் தூய்மை பணியாளர்களை சாதி ரீதியாகவே மற்றும் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி தனக்கான சொந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர் இதில் ஆதிக்க வர்க்கம் கொண்ட அயோக்கியர்கள் அடங்குவர்.
ஆனால் ஒரு பக்கம் தமிழக அரசும் சரி, மத்திய அரசு சரி தூய்மை பணியாளர்களை தெய்வங்களாகவும் ஊர் பகுதிகளை சுத்தம் செய்யும் தேவதைகளாகவும் மன்னர்களாகவும் பார்த்து வருகின்றனர்.
இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அவர்களை கொடூராமாக மிரட்டி தன்னுடைய சொந்த பணிகளை செய்து வருகின்றனர் அப்படிப்பட்ட சம்பவம் தர்மபுரி மாவட்டம்
காரிமங்கலம் வட்டம் கதிர்நாயக்கனஅள்ளி ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் கவிதா செந்தில் அவர்களின் சொந்த கட்டிட வேலைக்கு நான்கு பெண் தூய்மை பணியாளர்களை வரவழைத்து அவர்களுக்கு அதிகம் பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி வேலை செய்து வருகிறார் என அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்ற்னர்.
ஊராட்சி மன்ற தலைவர் கவிதா செந்தில் ஊரில் பல்வேறு இடங்களில் குப்பைகளும் சாக்கடைகளும், தேங்கிய நிலையில் இருக்கும்போது அதனை சுத்தம் செய்யாமல் தூய்மை பணியாளர்களும் ஊராட்சி மன்ற தலைவரோடு சேர்ந்து பணத்திற்காக ஊரை சுத்தம் செய்யாமல் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டு வேலையை செய்கின்றனர், இப்படி இருக்கும் தூய்மை பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசு மாத சம்பளம் கொடுத்து வந்தால் ஊரை சுத்தம் செய்யாமல் மக்களிடத்தில் அரசுக்கும், தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் கதிர்நாயக்கனஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா செந்தில் அவர்கள் ஜனநாயகத்திற்கு எதிராக செய்யப்படுகிறார் என புகார்கள் எழுந்துள்ளது.
மக்கள் பொது சேவையை விட்டுவிட்டு அஞ்சயது தலைவரின் சொந்த கட்டிட வேலை, மாடு மேய்த்தல், வீட்டு கழிவறை சுத்தம் செய்தல், துணி துவைப்பது போன்ற பணிகளுக்கு தூய்மை பணியாளர்களை பணியமர்த்தி வருகிறார் , ஊராட்சி மன்ற தலைவர் கவிதா செந்தில். இதனால் பஞ்சாயத்து தலைவர் மீது தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதாபிமானத்தோடு கோரிக்கை எழுந்துள்ளது...பொறுத்திருந்து பார்ப்போம் தருமபுரி அதிகாரத்திற்கு மனிதாபிமானம் இருக்குமா என்று....??
Comments
Post a Comment