நாம் வாழும் பூமியில் மனிதன் வாழ்வதற்கு மிக முக்கியமாக இருப்பது காற்று அந்த காற்றுக்கு ஆதாரமாகவும் மூலதனமாகவும் இருப்பது இயற்கை.
இயற்கைக்கு உற்ற நண்பனாக ஆங்காங்கே மனிதனுக்கும் நண்பனாக இருப்பது மரங்கள் மட்டும்தான்.
இந்த மரங்களுக்கு அவ்வபோது கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு மழை பொழியும் பொழுதுதான் ஒரு புத்துணர்ச்சி கிடைத்து மரங்களின் வளர்ச்சி மிகச் செழுமையாக இருப்பதை நாம் உணர்கிறோம் மரங்கள் செழுமையாக இருக்கும் பொழுதுதான் மனிதனாக வாழும் நாம் ஆரோக்கியமாக செழுமையாக வளர்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்.
தற்பொழுது தமிழகத்தில் அதிகப்படியான வெப்பநிலை தாக்கம் உருவெடுத்தே வருகிறது இதனால் தமிழகத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் சாலைப் பகுதிகள் போன்ற இடங்களில் மரங்கள் நீரின்றி காய்ந்த நிலையில் காணப்பட்டு இலைகள் உதிர்ந்து ஒவ்வொரு பகுதிகளிலும் மரங்கள் தானாகவே சாய்ந்து கொண்டிருக்கிறது இதனால் மரங்களின் அழிவால் மனிதனின் வாழ்க்கைக்கு அழிவுகள் ஏற்படுவதற்கு குறுகிய காலமே உண்டு என்பது இந்த வெயிலின் தாக்கத்தால் அழியும் மரங்களால் நமக்கு இயற்கை உணர வைக்கிறது.
இந்த இந்த அழிவை தடுக்க வேண்டும் என்றால் நமது பகுதியில் உள்ள சாலையில் உள்ள வீடுகளில் உள்ள மரங்களுக்கு காலை மாலை போன்ற நேரங்களில் நீர் ஊற்ற வேண்டும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த சூழலில் இருக்கும் பொழுது அரசு அலுவலங்களில் உள்ள கல்லூரிகளில் உள்ள மரங்களுக்கு நீர் ஊற்றுவது யார் என்ற கேள்வியை தர்மபுரியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
காரணம் தர்மபுரி மாவட்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேக்குமரம் வேம்பு மரம் புங்கம் மரம், என பல்வேறு மரங்கள் உள்ளது தற்பொழுது வெயிலின் தாக்கத்தால் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் உள்ள மரங்கள் காய்ந்து கீழே விழுந்து கிடக்கிறது இதனால் மேலும் கூடுதலாக உள்ள மரங்கள் சாய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதனை உணர்ந்து உடனடியாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் இந்த கல்லூரியில் உள்ள மரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்து இங்கே வறட்சியில் கிடைக்கும் மரங்களை பசுமையான வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டுமென தருமபுரியில் உள்ள முன்னாள் கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments
Post a Comment