5 லட்சம் கோடி தமிழக மக்களின் வரிப்பணத்தை கொடுக்காமல் தமிழ்நாட்டை சீரழித்து வருவது பாஜகவின் மோடி ஆட்சிதான்..! என்று தருமபுரி மக்கள் உண்மையை உணரவேண்டும் - ( நாம் இந்தியா கூட்டணி அல்ல இந்தியாவை காப்பாற்ற இணைந்த கூட்டணி ) வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பி பழனியப்பன் பேச்சு



5 லட்சம் கோடி தமிழக மக்களின் வரிப்பணத்தை கொடுக்காமல் தமிழ்நாட்டை சீரழித்து வருவது பாஜகவின் மோடி ஆட்சிதான்..! என்று தருமபுரி மக்கள் உண்மையை உணரவேண்டும் - ( நாம் இந்தியா கூட்டணி அல்ல இந்தியாவை காப்பாற்ற இணைந்த கூட்டணி )  வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பி பழனியப்பன் பேச்சு 


வருகின்ற மே மாதம் 19 தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் திமுக மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், கடத்தூர், போன்ற பகுதிகளில் அனைத்து கட்சி கூட்டணி காட்சிகளை அழைத்து திமுக வேட்பாளரான வழக்கறிஞர் ஆ.மணி அவர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 


இன்று காலை பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி எஸ் சரவணன் அவர்களின் அலுவலகத்தில் தோழமை காட்சிகளை சந்திக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பன் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களை அறிமுகம் செய்து நாம் இந்தியா கூட்டணி அல்ல இந்தியாவை காப்பாற்ற இணைந்த கூட்டணி என்று தொண்டர்களிடையே உரையாற்றி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.  


கட்சிக்காக உழைத்தவரை வேட்பாளர் என்று கூறி ஐஸ் வைத்து உடனடியாக மனம் மாறி வேட்பாளரை மாற்றி கட்சி தொண்டர்களை குழப்பதில் வைத்து சம்பவம் இங்கே நடப்பது நீங்கள் அறிந்தது என்று பொதுவாக கூறியபோது கூட்டத்தில் இருந்தவர்கள் கலகப்பாக சிரிக்க தொடங்கிவிட்டனர்.


நாம் கடுமையாக உழைக்கவேண்டும் நமக்கான நேரம் குறைவாகவே உள்ளது இந்தியாவை காப்பாற்ற நாம் ஒரு தேர்தல் போராட்டத்தில் இணைத்துள்ளோம், பாஜக மோடி அரசால் இந்தியாவும் தமிழ்நாடும் எந்த நிலையில் உள்ளதென்று எடுத்தது கூறுங்கள் 400, 500 என்று விற்ற சிலிண்டர் இன்று 900 ஆயிரம் ரூபாய் விற்கிறது, பெட்ரோல் 50, 60 என்று விற்ற பெட்ரோல் டீசல் விலை இன்று 100 ரூபாய் விற்று வருகிறது. நேற்றைய செய்திகளில் பார்க்கும் திடிரென்று சுங்க வரி கட்டணங்கள் விலையேறியுள்ளது. 


இப்படி பாஜக ஆட்சியில் சுங்கச்சாவடி நுழைவு கட்டணம் உயர்ந்தால் உணவு பொருள்களின் விலை உயரும், உணவு பொருட்களின் விலை உயர்ந்தால் ஹோட்டல்களில் உணவு விலை ஏற்கொண்டே இருக்கும் இப்படி இருக்கும் சூழலில்  மக்களின் வாழ்வாதாரம் பெரும் ஆபத்தில் போய் முடியும் என்று தெரு பிரச்சரம் செய்து மக்களை விழிப்படைய செய்யுங்கள்.


  நம்முடைய அமைச்சர் உதயநிதி அவர்கள் சொன்னதைபோய் சொல்லுங்கள் நமது தமிழ்நாட்டின் மக்களுடைய 5 லட்சம் கோடி பணத்தை தராமல் தமிழ்நாட்டை வளரவிடாமல்  தடுப்பதே பாஜக தாமரை சின்னம்தான் என்று உரக்க சொல்லுங்கள் நாம் அனைவரையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம் என்று பழனியப்பன் கூறினார்.

Comments