அரூர் அரசு மருத்துவமனைக்குள் பற்ற வைக்கும் தீ - நோயாளிகள் அவதி - செய்தியாளர் படம் பிடித்தால் மிரட்டும் மருத்துவ நிர்வாகம்...அமைச்சர் மா சுப்ரமணியம் நடவடிக்கை எடுப்பாரா...களத்தில் ஆய்வு செய்வாரா மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி....

அரூர் அரசு மருத்துவமனைக்குள் பற்ற வைக்கும் தீ - நோயாளிகள் அவதி - செய்தியாளர் படம் பிடித்தால் மிரட்டும் மருத்துவ நிர்வாகம்...அமைச்சர் மா சுப்ரமணியம் நடவடிக்கை எடுப்பாரா...களத்தில் ஆய்வு செய்வாரா மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி....
தருமபுரி மாவட்டத்தில் மிக முக்கிய நகரமாக இருக்கும் அரூர் பகுதி. இப்பகுதிக்குட்பட்ட சுற்று வட்டாரத்தில் சுமார் 2 லட்சம் பேர் மருத்துவ சேவையில் பயன்பெறும் வகையில் அரூர் அரசு மருத்துவமனைக்கு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இஸ்கேனிங் மிஷின் சிறப்பான அனுபவம் பெற்ற மருத்துவர்கள் என மிக சிறப்பான முறையில் மருத்துவ சேவையை செயலாற்றி வருகிறது. இது மட்டுமில்லாமல் தருமபுரி மருத்துவ இணை இயக்குனராக இருக்கும் சாந்தி அவர்களும் பல முறை மக்களை சந்தித்தும் செய்தியாளர்களை சந்தித்தும் குறைகளை கேட்டு அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு நல்ல பேர் பெற்று வருகிறார். இதனால் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி என தருமபுரி அரசு மருத்துவமனைக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி இருக்கிறார் சாந்தி அவர்கள் அதைத்தாண்டி அந்த அளவிற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவ சேவையால் ஆட்சிக்கு எந்த அவபெயரும் எடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்து மக்களின் மருத்துவ சேவையை நிலை நாட்டி வருகிறார். ஆனால் இப்படி ஒரு பக்கம் இருக்கும் போது அரூர் அரசு மருத்துவமனையில் நடைபெறும் சுகாதார சீர்கேட்டை சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கேட்டால் அவர்களை நீ வேறு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என ஒரு சில செவிலியர்கள், பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சுமார் இரண்டு நாட்களாக அப்பகுதிக்கு செய்திகள் எடுக்க சென்ற போது அங்கே நடக்கும் சுகாதார சீர்கேட்டை வீடியோ எடுக்க விடாமல் செவிலியர்கள் தடுத்து நிறுத்தினர். 

எதுவாக இருந்தாலும் எங்கள் எம் ஓ வை கேளுங்கள் என்கின்றர். மருத்துவத்துறையில் நடக்கும் குற்றங்களை சம்பந்தபட்ட மருத்துவ அதிகாரிகளிடம் கூறிவிட்டு செய்திகள் எடுத்தால் எங்களிடம் செய்தியாளர்கள் பேரம் பேசுகின்றனர் பணம் கேட்டு மிரட்டுகின்றனர் என வதந்தியை பரப்பி விடுகின்றனர். 

இதனால் நடக்கும் அவலனிலைகளை படம் பிடித்து செய்தி வெளியிடுவதுதான் பத்திரிக்கை துறையின் நீதி...

அதைவிட்டுவிட்டு குற்ற சம்பவத்தை சம்பந்த பட்ட துறையிடம் கூறினால் நாங்கள் ஏன் செய்தியாளராக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. 

அரூர் அரசு மருத்துவமனையில் இருக்கும் சமையில் அறை அருகே மலத்தின் கால்வயாக உள்ளதால் அங்கு பெருமளவில் துர்நாற்றம் வீசுகிறது. 
அதற்கு அருகிலேயே நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அறை உள்ளது. இதனால் நோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

அதுமட்டுமின்றி மருத்துவமனையில் இருக்கும் குப்பைகளை நோயாளிகள் இருக்கும் பகுதியில் வைத்து தீ வைக்கின்றனர். இதனால் நோயாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன என்பதை நாம் அங்கே உணர்ந்தோம்.

 ஆஸ்துமா, சளி,  இருமல் போன்ற நோயாளிகள் அதிகமாக வருகின்றனர் அந்த சமயத்தில் இப்படி குப்பைகளை பற்ற வைத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருவார்கள் என்பதை கூட உணராமல் இப்படி செய்தால் இதுதான் சரியான மருத்துவ சேவையா என்ற கேள்வியை எழுப்பும்.  இதனை படம் பிடிக்கும் போதுதான் மூத்த செவிலியர்கள் நீங்க எந்த ரிப்போர்ட்டர் எங்க மேடத்துகிட்ட பர்மிஷன் வாங்கணும் என படம் பிடிக்க விடாமால் எங்களிடம் வாக்குவாதம் செய்து எம் ஓ விடம் தொடர்பு கொண்டு பேசினார் அப்போது செல்போனில் பேசிய அவர் அவரை வீடியோ எடுங்கள் என்ற கூறியவுடன் அங்கிருந்த செவிலியர் எங்களை படம் பிடிக்க தொடங்கி விட்டார். மற்றும் அருகில் திடீரென வந்த பெண் காவல் துறை அதிகாரி எங்களிடம் விசாரிக்காமல் நாங்கள் ஏதோ குற்றம் செய்தது போல எண்களை புகைப்படம் எடுத்தார். 

ஒரு அரசு மருத்துவமனையில் மக்களுக்கு சரியான சிகிச்சையும், சரியான சுகாதார பாதுகாப்பும் கொடுத்து வரும் இந்த அரசுக்கு அரூர் அரசு மருத்துவமனையை நம்பி வரும் மக்களின் மனதில் பெருமளவில் அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர் 

அரூர் அரசு மருத்துவ நிர்வாகம் 

அங்கே நடக்கும் அவலங்களை செய்தி எடுக்க சென்றால் மிரட்டும் தோணியில் பேசுவது சரியா என்ற கேள்வியை உருவாக்குகிறது. மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவ நிர்வாகத்தை கேட்காமல்  செய்திகள் எடுக்க தடை என்று மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டால் எல்லோரும் அறிந்து விடுவார்கள்
 பிறகு நீதி மன்றம் இதில் உணமைகள் கூட பொய்யான சம்பவமாக மாறும் பொய்யான சம்பவங்கள் கூட உண்மையாக மாறும் என கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.

செய்தியார்கள் ஒரு போதும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட மாட்டோம் நடந்த உணமை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு செய்திகளை வெளியிடுவோம்

ஒரு செய்தி வெளியாவது உண்மைக்கும்  ஆளுகின்ற அரசின் வளர்ச்சிக்கும் கொண்டு செல்லும் செய்தியாளர்களின் எழுதும் எழுத்து பதிவு

Comments