காணொளி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
பாப்பிரெட்டிப்பட்டி. பிப், 26 -
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையம் பெருமளவு ரயில் பயணிகள் பயன்பாட்டில் உள்ளதால், ரயில் நிலையத்தை 15 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
இந்த நிகழ்ச்சியை இந்திய பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது, இந்த ரயில் நிலையத்திலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான ரயில் பயணிகள் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் ரயில் வசதி உள்ளதால் தினமும் பல்லாயிரம் ரயில் பயணிகள் வந்து செல்கின்றனர்
நாட்டை இணைக்கும் முக்கிய ரயில் பாதை பொம்மிடி வழியாக செல்வதால் பயணிகள் வசதிக்காக கூடுதல் வசதிகள் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது
இந்தியாவிலுள்ள 554 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது, அந்தப் பட்டியலில் பொம்மிடி ரயில் நிலையமும் இணைக்கப்பட்டு ரூபாய் 15கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
இதன் மூலமாக ரயில் நிலையத்தில் 2000 பேர் பயணிக்கக் கூடிய வகையில் ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்கள் முழுவதும் நிழல் குடைகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது
பயணிகள் செல்வதற்கு உயர் நடைமேடை அமைக்கப்பட்டு, மின் இயந்திரம் மூலம் லிப்ட் வசதி செய்யப்படுகிறது, பயணிகள் தங்குவதற்கு பெரிய அளவிலான தங்கும் விடுதிகள், உணவு வசதிகள் போன்றவைகள் செய்யப்பட்டு வருகிறது, மேலும் ரயில் நிலையத்தை கம்பீரத்தை காட்டும் வகையில் ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி அழகான வளைவுகள் கட்டிடக்கலை வேலைப்பாடுகள் மூலம் அழகு படுத்தும் பணியும், பயணிகள் உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது
அதே போல ரயில் நிலையத்திற்குள் உள்ளே வருபவர்களுக்கு முகப்பு பகுதியில் பெரிய அளவிலான உள்ளே வருவதற்கும் செல்வதற்கும் தனித்தனி ஆர்ச் வளைவுகள் அமைக்கப்பட்டு மிகப் பிரமாண்டமான முறையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது
இவை அனைத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்யும் விதத்தில் பிரதமர் மோடி காணொளி மூலமாக இன்று திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி .சேலம் கோட்டம் நிதி மேலாளர் மணிகண்டன். கோட்ட உதவி நிதி மேளாலர் பிரதாப் . ஆகியோர் கலந்து கொண்டனர்
இதற்கான ஏற்பாடுகளை பொம்மிடி ரயில்வே நிர்வாகமும் ரயில் பயணிகள் நல சங்கமும் ஏற்பாடு செய்திருந்தது
இந்த நிகழ்ச்சியின் போது ரயில் பயணிகள் சார்பாகவும் நல சங்கத்தின் மூலமாகவும் பல்வேறு பகுதிகளுக்கு ரயில் மூலமாக செல்ல கூடுதல் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டது
Comments
Post a Comment