அரசியல் தலைவர்களுக்கு மாலை அணிவிக்காமல் ஏன் அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் - மறுமலர்ச்சி ஜனதா கட்சி ஜெயகுமார் கேள்வி
தர்மபுரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான அம்பேத்கர் சிலைகள் மற்றும் பெரும் தலைவர் காமராஜர் அவர்கள் சிலைகள் உள்ளது,
07 மற்றும் 08/01/2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மற்றும் பெரும் தலைவர் காமராஜர் அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்காமல் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி.பள்ளிப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள மாதா சிலைக்கு மாலை அணிவிக்க சென்றது ஏன்??
அரூர் மொரப்பூர் பாப்பிரெட்டிப்பட்டி பாலகோடு ஊத்தங்கரை பகுதியில் தன் சார்ந்த ஜாதி இளைஞர்களை திரட்ட தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட கொங்கு சமுதாய தலைவர் திரு சந்திரசேகர் அவர்கள் மூலம் 300மேற்பட்ட கிராமத்தில் ஜாதி இளைஞர்களை திரட்ட பெரும் செலவை செய்தது யார்??
தருமபுரி மாவட்ட காவல்துறை மற்றும் உளவுத்துறை தனது கடமையை செய்ய வேண்டும்.
மறுமலர்ச்சி ஜனதா கட்சி தலைவர் ச.ஜெயகுமார்
Comments
Post a Comment