உரிமைத் தொகை ஆயிரம் & பொங்கல் பரிசு ஆயிரம் பொங்கல் பண்டிகையைபெண்கள் பண்டிகையாக மாற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்போம்ஒன்றிய செயலாளர் பி, எஸ், சரவணன் அறிக்கை
பொங்கல் பண்டிகையை
பெண்கள் பண்டிகையாக மாற்றிய
தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்போம்
ஒன்றிய செயலாளர் பி, எஸ், சரவணன் அறிக்கை
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி எஸ் சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்
தமிழகத்தின் அடித்தட்டு மக்களின் கவலையைப் போக்கும் உன்னதமான திட்டங்கள் மூலம் மக்களின் முதல்வரான நமது தளபதியார்
தொடர்ந்து வரலாறு காணாதா வகையில் தமிழக தாய்மார்களின் துயர் துடைக்கும் வகையில் வாரி வழங்கி வருகின்றார்
நமது தமிழக முதல்வர் மகளிர் உரிமைத் தொகை மாதம்தோறும் ஏற்கனவே 1000 ரூபாய் வழங்கி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்
தற்போது 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஏழை எளிய மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் உரிமை தொகை 1000 ரூபாய். பொங்கல் பரிசு 1000 ரூபாய் என இணைந்து 2000 ரூபாய் வழங்குவதாக இனிப்பான செய்தியை மகளிர்க்கு வழங்கி அவர்களது கவலையை போக்கியுள்ளார்
இயற்கை சீற்றத்தால் மாநிலம் பெரும் நிதி நெருக்கடியில் இருந்த போதிலும்
தமிழக மக்களின் தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை சிறப்பிக்கும் வகையில் வாரி வழங்கிய தமிழக முதல்வருக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்
நமது தமிழக முதல்வரின் முத்தான இந்த நலத்திட்டங்களை நமது ஒன்றியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் திமுக வின் மகளிர் அணியினர் செயலாற்றி விட வேண்டும் என தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு தனது அறிக்கையில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி ,எஸ், சரவணன் தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment