பொம்மிடி வாரச்சந்தையில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்....பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்


பொம்மிடி வாரச்சந்தையில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பொ. மல்லாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் பொம்மிடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் பொம்மிடி வாரச்சந்தையில் சேலம் மெயின் ரோட்டில் சிலர் போக்குவரத்துக்கு இடையூறாக சரக்கு வாகனங்களை நிறுத்தியும் சாலையோரம் கடை அமைத்தும் வியாபாரம் செய்து வந்தனர்.


 இவர்களை உடனடியாக போக்குவரத்துக்கு இடையூறு இன்றி சந்தை பகுதிகளுக்கு எடுத்துச் சென்று கடை அமைத்துக் கொள்ளவும் வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்யவும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது அதேபோல பேரூராட்சி ஊழியர்கள் வாரச்சந்தையில் கடை நடத்தி வருபவர்களிடம் பிளாஸ்டிக் தடை உள்ளதால் யாரும் பயன்பாட்டிற்கு  எடுத்து வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது கடைகளை சோதனை கேட்டதில் ஐந்துக்கு மேற்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்ததால் அந்த கடைகளுக்கு தலா 100 ரூபாய் என அபராதம் விதித்து பேரூராட்சி காவல்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்

Comments