ஊர் முழுவதும் ஆய்வில் தருமபுரி மாவட்ட ஆட்சியர்...களத்தில் இறங்கிய தருமபுரி எஸ் பி.. டி எஸ் பி...

இன்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி விட்டு பகுதியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் காலை முதல் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார் அது மட்டும் இன்றி பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களிடம் குறைகளை கேட்டு அறியும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி போன்ற பகுதிகள் பெரும் பரபரப்பாக இருந்து வருகின்றது இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு ஒரு பக்கம் இருந்தாலும் காலையில் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு பின்புறத்தில் தனியார் மண்டபத்தில் காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அது பற்றியான செய்தி..

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் அபாயகரமான நிலைப்பாடுகளையும் தங்களை பாதுகாப்பதற்கு காவல்துறையிடம் சென்று மனு கொடுப்பதற்கு தயங்கிக் கொண்டும் இந்த நிகழ்வுக்காக காவல்துறை செல்ல வேண்டுமா என்ற உறுத்தலோடு மற்றும் உள்ளூர் நபர்களால் பஞ்சாயத்து பேசி சமரசம் செய்யும் முயற்சியில் லட்சக்கணக்கான மக்கள் காவல்துறைக்கு சென்று மனு கொடுக்காமல் இதுவரையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அது மட்டும் இன்றி நிலம் சம்பந்தப்பட்ட தகராறில் தாக்குதல் முயற்சிகளும் நடைபெறுவதால் வழித்தடம் ஆக்கிரமிப்பு அறிவிப்பு பிரச்சனைகள் ஏற்படுவதால் ஒவ்வொரு பகுதிகளிலும் கொலை முயற்சி, கொலை தாக்குதல் போன்ற நிலவரங்கள் நீடி தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் தமிழக காவல்துறை நேரடியாக ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அப்பகுதியில் உள்ள மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அவர்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதனை அடுத்து
தமிழ்நாடு காவல்துறை மற்றும் தர்மபுரி காவல்துறை சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.  இந்த முகாமில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அரூர் உட்கோட்ட பிரிவு ஜெகநாதன் அவர்களும், கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டு அறிந்தனர். தர்மபுரி மாவட்ட காவல்துறை மற்றும் அரூர் உட்கோட்ட பிரிவு காவல்துறை சார்பில் நடைபெற்ற  குறை தீர்க்கும் முகாமில சுமார் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பிறகு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் எந்த துறையைச் சார்ந்ததோ அந்த துறை அதிகாரிகளிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜேசு பாதம் அவர்கள் மனுக்களை கொடுத்து மனுக்களை கொடுத்த நபருக்கு தகுந்த நடவடிக்கையை ஏற்படுத்தி அவருடைய  பிரச்சனையை தீர்க்க வேண்டும் என தகவல் தெரிவித்தார். மற்றும் அரூர் உட்கோட்ட பகுதியில் நடைபெறும் சந்து கடை செம்மண் கொள்ளை, போன்ற சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் அரூர் உட்கோட்ட பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் அவர்களிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நிச்சயமாக அதற்கான நடவடிக்கை தற்போது நடந்து கொண்டே இருக்கிறது.

மேலும் பல்வேறு இடங்களில் அரசு அனுமதியின்றி முறையற்ற செம்மண் கொள்ளை, மலைகளில் இருக்கும் கற்களை கொள்ளையடித்து வியாபாரம் செய்யும் தொழில், மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி டாட்டா ஏசி டிராக்டர் கனரக வாகனங்களை பயன்படுத்தி செய்யும் இது போன்ற அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நிச்சியம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
 மேலும் நிலத்தகராறு போன்ற பிரச்சனைக்குரிய ஆவணங்களை பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் துறை அதிகாரி சா கார்த்திகேயன் அவர்களிடம் கொடுக்கப்பட்டது மேலும் மனு கொடுத்தவர்களுக்கு காவல்துறை சார்பில் பொதுமக்கள் எவராயினும் எந்த ஒரு பிரச்சனையிலும் ஈடுபடும் பொழுது பொறுமையாகவும் கவனமாகவும் இருங்கள் வார்த்தைகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் எதுவாக இருந்தாலும் காவல்துறைக்கும் அந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் தகவல் கொடுங்கள் காரணம் காவல்துறைக்கும் உரிய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்காமல் நீங்கள் ஒரு சம்பவத்தில் ஈடுபடும் பொழுது அங்கே பிரச்சினைகள் ஏற்படுகிறது அப்போது உயிர் சேதப் பிரச்சினைகளோ உங்களுடைய உடலுக்கு அபாயகரமான  பிரச்சனைகளோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். அதனால் ஒவ்வொரு நிகழ்வையும் நீங்கள் உணர்ந்து கொண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் நிச்சயம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் உங்களுக்காக பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று இந்த முகாமில் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது

Comments