தமிழகத்தின் போர் வம்ச இளைய தளபதிகளே நாளை சேலத்தில் அணி திரள்வோம்...!! அழைப்பு விடுத்த பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார்...
தமிழகத்தின் போர் வம்ச இளைய தளபதிகளே நாளை சேலத்தில் அணி திரள்வோம்...!! அழைப்பு விடுத்த பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர்
நாளை சேலத்தில் திமுகவின் மாநில இரண்டாவது இளைஞர் அணி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கருப்பு சிவப்பு வண்ணங்கள் ஆங்காங்கே பறந்து கொண்டிருக்கிறது. சுவற்றிலும் வண்ணங்களால் பூசப்பட்டு காட்சி தந்து கொண்டிருக்கிறது. இந்த இளைஞர் அணி மாநாடு என்பது பாசிச அரசியலை அறவே ஒழிக்க வேண்டும் இந்துத்துவா அரசியல் வம்சத்தை நாம் ஒன்று திரண்டு மாற்றி அமைக்க வேண்டும் தமிழகத்தில் உள்ள வரலாற்றில் நம்முடைய மூத்த தாத்தாக்கள் எப்படி மதவாத அமைப்புகளை எதிர்த்து போர் கொண்டு நம் தமிழகத்தை காத்தார்களோ அதுபோல் மீண்டும் நாம் தமிழகத்தை காப்பதற்கு ஒரு அரசியல் போர் நடத்த வேண்டும் அதனால் நம் வருங்கால தளபதிகளுக்கு எல்லாம் வழிகாட்டும் தளபதியாக இருக்கும் மாநில இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் அண்ணன் உதயநிதி அவர்களின் அழைப்பை ஏற்று அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சேலத்தில் நடக்கும் மாநாட்டை மிகப் பிரமாண்ட அளவில் செயல்படுத்த வேண்டும். மற்றும் நமது தமிழகத்தில் சாதி, மதவாத கட்சிகள் இல்லாமல் திமுக எனும் அரசியல் கொள்கையோடு அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழகத்தின் பன்முகம் காத்திட பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் தமிழகத்தின் வீர அடையாளமான இளைய சமுதாயமே அனைவரும் சேலம் மாநாட்டிற்கு படையெடுத்து வாருங்கள் என பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்
Comments
Post a Comment