மறைந்த விஜயகாந்த்திற்கு தருமபுரி மாவட்டத்தில் பதினோரு நாள் ஈமைச்சடங்கு 500 பேர் மொட்டை அடித்தனர்


தமிழ் திரை உலகில் முன்னி நடிகரும் தேமுதிக தலைவர் ஆன விஜயகாந்த் மறைந்து 11 நாட்கள் ஆகின்றன இவருக்கு இமை சடங்கு நடத்த ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் ஒகேனக்கல்லில் ஏற்பாடு செய்திருந்தனர்.


அந்த அடிப்படையில் இன்று தேமுதிக மாநில அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் தலைமையில் முதல் சுற்றி நூற்றுக்கணக்கான விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மொட்டை அடித்துக் கொண்டனர். பிறகு ஒகேனக்கல் காவேரி ஆற்றங்கரையோரம் விஜயகாந்த்திற்கு துதி செலுத்துகின்ற வகையில் ஏராளமான மொட்டை அடித்த தொண்டர்கள் ரசிகர்கள் ஓம குண்டம் அமைத்து வழிபாடு செய்தனர். இந்த ஈமச்சடங்கு திதி கொடுக்கும் நிகழ்வில் சிறியவர்கள் பெரியவர்கள் பெண்கள் என யாராலமனோர் கலந்து கொண்டனர்.



பிறகு மொட்டை அடித்துக் கொண்ட விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் உருவம் பொறித்த பேனர் அருகே நூற்றுக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் ஒரு நிமிடம் அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தி வழிபட்டனர்.


தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் விஜயகாந்த் ரசிகர்கள் தொண்டர்கள் இமைச் சடங்கு நடக்கும் இடத்திற்கு தொடர்ந்து வருகை புரிந்து மொட்டை அடித்துக் கொண்டு வருகின்றனர். பிறகு 5000 நபர்களுக்கு அசைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர்.


மறைந்த விஜயகாந்த் திர்க்கு ஈமை சடங்கு நடக்கும் இந்த நிகழ்வு ஒகேனக்கல் பகுதியில் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


Comments