பூங்கா அமைப்பதில் அதிமுக திமுக உள்ளிட்ட இருதரப்பு மக்களிடயே வாக்குவாதம் - பேச்சுவார்த்தை நடத்தி சென்ற DRO வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
பூங்கா அமைப்பதில் அதிமுக திமுக உள்ளிட்ட இருதரப்பு மக்களிடயே வாக்குவாதம் - பேச்சுவார்த்தை நடத்தி சென்ற DRO வாகனத்தை பொதுமக்கள் முற்னுகையிட்டதால் பரபரப்பு.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள வடசந்தையூர் கிராமத்தில் கால்நடை சந்தை நடக்கும் இடத்தில் மது பிரியர்கள் சிலர் மது அருந்திவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சந்தை செயல்பட்ட இடத்தில் வனத்துறை சார்பில் மரகத பூஞ்சோலை சிறுவர் பூங்கா அமைக்க திட்டமிட்டு அதற்காக தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சந்தை நடந்த இடத்தில் பூங்கா அமைத்து வருவதால், கால்நடை சந்தையை, அருகேயுள்ள கோவிலின் முன்பு நடத்தி கொள்ளலாம் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில் இதற்கு உண்டான ஒப்பந்தத்தை அதிமுகவை சேர்ந்த நபர் ஒப்பந்தம் செய்து பணிகள் மேற்கொண்டு வருகின்றார். ஆனால் வழக்கமாக சந்தை நடந்த இடத்தில் சந்தை நடக்க வேண்டும் என திமுகவினர் உடனான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் பணிகளை ஆய்வு மேற்கொண்ட டிஆர்ஓ முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி பின்பு தீர்வு காணப்பட்டு கண்டிப்பாக இந்த இடத்தில் பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். அப்போது தங்களுக்கு சந்தை வேண்டாம் பூங்கா வேண்டும் என தெரிவித்து DRO வாகனத்தை பெணகள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
------
Comments
Post a Comment