அ.பள்ளிப்பட்டி காவல் துறையால் அரூர் மற்றும் சேலம் சாலையோர கடை வியாபாரிகள் கண்ணீர்...!! காவல் துறையின் ஆதரவு கிடைக்குமா ..?

அ.பள்ளிப்பட்டி காவல் துறையால் அரூர் மற்றும் சேலம் சாலையோர கடை வியாபாரிகள் கண்ணீர்


தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய சாலையான சேலம் மற்றும் அரூர் நெடுஞ்சாலை பகுதி உள்ளது. இந்த  சாலையோரங்களில் மட்டும் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இனிப்புகள் கார வகைகள் தேநீர் மற்றும் வீட்டிற்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் தேவை என்றால் முக்கிய சாலை பகுதியாக இருக்கும் அ பள்ளிப்பட்டி எருளப்பட்டி மூக்கா ரெட்டிப்பட்டி புதுப்பட்டி போன்ற பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் இருக்கும் கடைகளில் பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

 மற்றும் தேநீர் அருந்துவதற்காக சாலூர் நாகலூர் அதிகாரப்பட்டி, பள்ளிபட்டி,  மாரியம்பட்டி கவுண்டம்பட்டி புதுப்பட்டி பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் தேநீர் அருந்துவதற்காக இரவு நேரங்களில் நேரம் பார்க்காமல் வருகை தருவதால் சாலையோரத்தில் இருக்கும் தேநீர் வியாபாரிகளுக்கு வியாபாரத்தின் மீது பெரும் நம்பிக்கை ரீதியான வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்றும் சேலத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அவ்வபோது தேனீர் கடை அருகே வாகனத்தை நிறுத்தி தேநீர் அருந்தி செல்கின்றனர் இதனால் எங்களுடைய வியாபாரம் அதிகமாகின்றது 
பெரு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என டீ கடை உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் சுங்கச்சாவடி திறப்பின் போது இரவு முழுவதும் ஆங்காங்கே உள்ள கடை வியாபாரிகளுக்கு விதிமுறைகளின் படி அனுமதி கொடுத்தால் பல்வேறு கடை உரிமையாளர்களின் குடும்பங்கள் நம்பிக்கையாக தங்களின் வாழ்வாதாரத்தை மேலும் உயர்த்துவதற்காக பயணிக்கும்,  ஆனால் அ.பள்ளிப்பட்டி காவல்துறையில் உள்ள ஒரு சில காவல்துறையினர் 11 மணி அளவில் மற்றும் காலை 3 மணி அளவில் 4  மணி அளவில் மின் விளக்கை அணைத்து கடையின் சட்டரை மூடச் செல்வதால் எங்களுக்கு வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது என டீக்கடை உரிமையாளர்கள் ஓட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் நமது சாலையில் அதிகமான போக்குவரத்து உருவாகி வருகின்றது.

இதனால் பல்வேறு கடை வியாபாரிகளின் வாழ்க்கை மேலோங்கும் அதற்கு முழுமையாக காவல்துறையுடைய ஒத்துழைப்பு தேவை காவல்துறை என்ன மாதிரி விதிமுறைகள் சொல்கிறதோ அந்த அளவிற்கு இப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத கடைகளில் காவல்துறை கண்காணிப்பு கேமரா பொறுத்தச் சொல்கின்றனர் அப்படி செயல்பட்டு வந்தாலும் இரவு நேரங்களில் வந்து கடையை மூடச் சொல்கின்றனர்.

இதனால் நாங்கள் பெரும் அளவில் வியாபாரம் இன்றி தவித்து வருகின்றனர் என்று அ.பள்ளிப்பட்டி மற்றும் மூக்காரெட்டிப்பட்டி புதுப்பட்டி போன்ற சாலை பகுதியில் இருக்கும் டீக்கடை உரிமையாளர்கள் பேக்கரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர் இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோர கடைகள் எப்படி இயங்க வேண்டும் என்றும் எப்படி பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்று இந்த பகுதி வாழ் மக்களுக்கு வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்த வணிக வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது. இப்படி கோரிக்கை வைக்கும் டீ கடை உரிமையாளர்கள் தங்கள் கடையில் எத்தனை பேர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கழிவறை கட்டியுள்ளனர் , என்றால் கேள்வி குறியாக இருக்கும் ஒரு வியாபாரிகள் தங்களின் வளர்ச்சிக்காக கோரிக்கை வைக்கும் போது தங்களை நம்பி வரும் வாடிக்கையாளர்களின் சுகாதரத்திற்கு ஒரு நம்பிக்கையான வியாபாரியாக இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்பதை கடை உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும், அப்படி கடைகளில், வணிக தளங்களில் கழிவறை  இல்லாத பட்சத்தில் அதற்கு அனுமதி கொடுக்காமல் உணவு பாதுகாப்புத்துறை, சுகாதரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments