தமிழ்நாடு பாக்கு தட்டு உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.
தமிழ்நாடு பாக்கு தட்டு உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் பூபதி கல்யாணம் மண்டபத்தில் நடைபெற்றது இதில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்து பாக்கு தட்டு உற்பத்தி தொழில் முனைவோர்கள் சுமார் 150க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நடப்பாண்டு தொழில் நிலை அறிக்கை வரும் ஆண்டு தொழில் மேலாண்மை வழிமுறை, நாட்டிற்கு தேவையான பாக்கு தட்டு பற்றாக்குறை, ஏற்றுமதி, இறக்குமதி அரசின் டெண்டர்,போன்றவற்றை குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட தொழில் மையம் தொழில் ஊக்குவிப்பு அலுவலர் வெங்கடேஸ்வரி அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசினார். தமிழ்நாடு முழுவதும் பாக்கு தட்டு உற்பத்தியாளர் சங்க உருவாக்கம் குறித்து கோவை மாவட்ட சேர்ந்த வெங்டாசலம் பேசினார், தொழில் நிலை சார்ந்த பிரச்சினைகள் குறித்து கோவை மாவட்ட சேர்ந்த குருமூர்த்தி பேசினார். கோவை பாக்கு தட்டு குழுமம் குறித்து உரிமையாளர் சந்துரு பேசினார். தொழிற் சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் உள்ள இணைப்பு குறித்து ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொலைநோக்கு பேரமைப்பு தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த செல்வம் பேசினார். இந்த கூட்டத்தினை தர்மபுரி மண்டல பாக்கு மட்டை தட்டு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அழகர்ராஜா துணைத் தலைவர் செந்தில்குமார் செயலாளர் தீபக் துணைச் செயலாளர் .ரவிக்குமார் பொருளாளர் ராஜசேகர் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைந்து நிகழ்ச்சிகள் நடத்தினர்.
Comments
Post a Comment