நேற்று நெல்லையில் களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி இன்று பேருந்து சேவை தொடக்கம்




நெல்லையில் பேருந்துகள் சேவை தொடங்கியது; வெள்ளம் வடிந்ததால் சாலைகளில் போக்குவரத்து அனுமதி..!!


தென் மாவட்டங்களில் பெய்த கடும் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தாமிரபரணி ஆற்றின் கால்வாயின் கரையிலிருந்து வெளியேறிய தண்ணீரால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் தூதுகுழி கிராமத்தில் நேரில் ஆய்வு அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார், இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் காவல் துறையினர் உடனிருந்தனர் 



மேலும், அந்த கிராமத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் - உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிடவும் அதிகாரிகள் - அலுவலர்களிடம் வலியுறுத்திவிட்டு நெல்லை பகுதிக்கு சென்று தேங்கும் மழை  நீரை வடிக்க செய்தோம். இன்று  நெல்லையில் பேருந்துகள் சேவை தொடங்கியது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம் செல்லும் பேருந்து சேவை தொடங்கியது. சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், வழியாக பேருந்துகள் பாபநாசம் செல்லும். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள எஸ்.டி.சி கல்லூரி சாலையில் நீர் முற்றிலுமாக வடிந்ததால் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வடக்குப் புறவழிச்சாலையில் நீர் வடிந்து வாகனங்கள் செல்லும் வகையில் ஏதுவாக இருந்த போதும் இன்னும் போக்குவரத்துக்கு அனுமதிக்கவில்லை. நெல்லை ஜங்ஷன் செல்லும் பேருந்துகள் வழக்கமான வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

Comments