அடுக்கு மாடி குடியிருப்பு தகுதி இருந்தும் வீடு இல்லை முற்றுகை செய்த பாப்பிரெட்டிப்பட்டி பொதுமக்கள்..ஆய்வு நடக்குமா ?

பாப்பிரெட்டிப்பட்டி பூனையனூர் அரசு தொகுப்பு வீடு ஒதுக்குவதில் முறைகேடு பொதுமக்கள் முற்றுகை பரபரப்பு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூரில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 192 வீடுகள் அரசால் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்குவது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இந்த வீடு ஒதுக்குவதில் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வசதியாக இருப்பவர்களுக்கு சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் போன்றவர்களுக்கு பெரும்பான்மையாக வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உண்மையான ஏழைகளுக்கு ஒதுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டனர் அப்போது அவர்கள் தெரிவிக்கையில் அரசு தரப்பில் எங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டதாக எங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது அதில் தாங்கள் ஒரு லட்சத்து 62,000 காசோலையை டிடியாக எடுத்து குறிப்பிட்ட தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஒப்படைக்க வேண்டும் என கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடிதம் வந்ததாகவும் அதன் பேரில் தாங்கள் வட்டிக்கு பணம் வாங்கியும் நகைகளை அடகு வைத்தும் பணம் ஒரு லட்சத்து 62 ஆயிரத்திற்கான டிடியை எடுத்து வந்து அதிகாரியிடம் கொடுத்த போது அனைத்து வீடுகளும் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் தற்போது வீடுகள் எதுவும் இல்லை எனக் கூறி புறக்கணித்தவர்கள் எனக் கூறி பொதுமக்கள் அதிகாரிகளை பூனையானூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முற்றுகையற்றனர் அப்போது அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுவாக்குவதும் ஏற்பட்டது தகவல் அறிந்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு  உங்கள் கோரிக்கைக்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்

Comments