ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவனின் 8 உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவனின் 8 உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சித்தாளந்தூரை சேர்ந்தவர் ரிக் வண்டி ஓட்டுனர் பழனியப்பன். இவரது மனைவி பூங்கொடி.  இவர்களின் இரண்டாவது மகன் 20 வயது சுகிசிவம் பெருந்துறையில் உள்ள கல்லூரியில் பி.டெக் 3ம் ஆண்டு பயின்று வந்தார்.  , கடந்த வெள்ளியன்று தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது வேறொரு இருசக்கர வாகனம் மோதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். திருச்செங்கோடு மற்றும் ஈரோட்டில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி  சுகிசிவத்திற்கு மூளைச்சாவு ஏற்பட்டது.   இதனை தொடர்ந்து,  அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முடிவு செய்து பெருந்துறை மருத்துவ கல்லூரிக்கு அவரது உடலை கொண்டு வந்தனர். அங்கு சுகிசிவத்தின் இதயம், சிறுநீரகம், கல்லீரல், தண்டுவடம், தோல், கண்கள் உள்ளிட்ட 8 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. கோவை, ஈரோடு, சேலம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டன. சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் இதயம் எடுக்கப்பட்டு ஈரோடு,  போலீசாரின் உதவியுடன் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  ஆம்புலன்ஸ் மூலம்   கோவை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. பின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது..

Comments