தர்மபுரி பொம்மிடி அருகே பதற்றமான சூழல்..! அரசுக்கே நாங்க தான்டா இடம் கொடுத்தோம் இந்த இடத்தில் பூங்கா அமைக்க எங்க கிட்ட அனுமதி கேக்கணும் என்று அரசு நிலத்துக்கு உரிமை கொண்டாடிய 11 பேர்..!
அரசுக்கே நாங்க தான்டா இடம் கொடுத்தோம் இந்த இடத்தில் பூங்கா அமைக்க எங்க கிட்ட அனுமதி கேக்கணும் என்று அரசு நிலத்துக்கு உரிமை கொண்டாடிய 11 பேர்..!
இந்த நிலையில் பொ. துறிஞ்சிபட்டி முதல் நிலை ஊராட்சிக்கு சம்பந்தபட்ட சந்தையூர் பகுதியில் சந்தை கூடும் பகுதியாக இயங்கி வந்த
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொ.துறிஞ்சிப்பட்டி ஊராட்சியில் சந்தையூர் என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான 4.67 ஏக்கர் இடம் உள்ளது. 62 செண்டு நிலம் தனியாக பட்டாளம்மன் கோவில் உள்ளது. இதற்கும் மேலே குறிப்பிட்டுள்ள 4-67 செண்டு இடத்திற்கு சம்பந்தமில்லை.
இப்பகுதியில் பல வருடங்களாக சந்தைகள் கூடும் இடமாகவும், ஆடு மாடுகள் விற்பனை செய்யும் இடமாகவும் அப்பகுதியில் 7 ஊர் சம்பந்தபட்ட இடமாக மக்கள் பயன் பாட்டில் இருக்கும் போது அரசும் சரி மக்கள் பயன் படுத்துட்டுமே என்று அப்போது இருந்த அரசு அதிகாரிகள் விட்டுள்ளனர். பிறகு இந்த இடத்தில் ஒரு கோவில் கட்டினா என்ன என்று அங்கே வந்து போகும் நபர்கள் ஒரு கல்வெட்டு சிலையை வைத்து வணங்கியுள்ளனர். காலப்போக்கில் கல்வெட்டு சிலையை 35 வருடங்களாகவே யாரும் கண்டு கொள்ளாமல் இருந்ததால் மண்ணில் புதைந்து போய்விட்டது. மறுபக்கம் சந்தை கூடும் பகுதியை சுற்றி இசுலாமியர்கள், மாற்று சமூகம் சார்ந்த இந்து சமூக மக்கள் அனைவருமே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.இந்த சமயத்தில் சந்தை கூடும் இடங்களில் அப்பகுதிக்கு வரும் நபர்கள் மது குடிப்பது, குடித்த பாட்டிலகளை உடைப்பது, அங்கே சண்டையிடுவது போற வர பெண்களை பொதுமக்களை வம்பாக அழைத்து கிண்டல் செய்வது போன்ற மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுவதால் மக்கள் பெருமளவில் பாதிப்பு அடைந்து வந்துள்ளனர்.100 கிராமங்களில் மரகத பூஞ்சோலை என்ற பெயரில் பூங்கா அமைக்க சட்ட மன்ற உறுப்பினர் வனத்துறை அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். இந்த திட்டத்தில் அரசால் கொண்டு வரப்படும் பூங்காவை 2 வருடத்திற்கு அந்த பகுதிக்கு உட்பட்ட வனத்துறை ஒப்பந்தம் செய்து மரக்கன்றுகளை நட்டு பராமரிப்புக்காக செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
சி எம் ஆர் முருகனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் |
4:67 ஏக்கர் நிலத்தில் 2 : 05 ஏக்கர் நிலத்தை மட்டும் பூங்காவாக மாற்ற அரசு நிலத்தை ஒதுக்கிவிட்டது. இந்த திட்டத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.பொ.துறிஞ்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவராகவும் மக்கள் செல்வாக்கும் கொண்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த சி எம் ஆர் முருகன் என்பவர் இந்த பூங்காவிற்கு அனைத்து சமூக மக்களிடமும், அப்பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட இசுலாமியர் சமூக மக்களிடமும் அரசு கொண்டு வந்த திட்டத்தை எடுத்து கூறி மக்களின் அனுமதியுடன் தீர்மானம் போட்ட பின்னர் பூங்கா பணிகளை தொடங்கியுள்ளார்.
ஆனால் இந்த பணியினை தொடங்கிய சி எம் ஆர் முருகன் 7 ஊர் சம்பந்த பட்ட கவுண்டர்களிடமும் வந்து பேச்சி வாரத்தை நடத்திவிட்டு இந்த பூங்கா பணியினை தொடங்கியிருக்க வேண்டும் என அதிமுக ஒன்றிய செயலாளர் சேகர் அவர்கள் கூறும் போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னடா இது அரசு கொண்டு வந்த திட்டதிற்கு அரசு பணிகளுக்கும் 7 ஊர் சம்பந்த பட்ட ஊர் கவுண்டர் கிட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சி எம் ஆர் முருகன் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறுகிறார்களே என யோசித்தால் அங்கதான் அந்த கண்றாவி புடிச்ச சாதி ஆணவம் விளையாடுவது தெரிய வருது. பொ.துறிஞ்சிப்பட்டி பகுதியில் மற்ற நபர்கள் பணிகளை செய்தால் இதுவரை எந்த மக்களிடமும் யாரும் அனுமதி கேட்பதில்லை, பேச்சி வாரத்தை நடத்துவதில்லை ஆனால் சி எம் ஆர் முருகன் மட்டும் மக்களுக்கான பணிகளை எடுத்து செய்தால் அங்கே உள்ள 7 ஊர் கவுண்டர்கிட்டையும் அனுமதி வாங்க வேண்டும் என்று என்ன கட்டாயம் உள்ளது என்ற கேள்வி எழுகிறது..?
இப்படி ஒரு யோசனை முடிந்து ஒரு இறவை கடந்த பின்னர் அடுத்த நாளான 22-12-2023 அன்று பல மிரட்டல்கள் பல எதிர்ப்புகள் வந்த நிலையில் கூட மக்களின் பெரும் ஆதரவோடு பூங்காவிற்கு கம்பி வேலி அமைக்கும் பணிகளை தொடங்கினார் சி எம் ஆர் முருகன்.
உடனடியாக அருகில் உள்ளா அண்ணாநகர் பகுதியை சார்ந்த ஒரு ஆண்கள், பெண்கள் என 11 பேர் கொண்ட கும்பல் மட்டும் இது ஏழு ஊர் சம்பந்த பட்ட இடம் எங்க கிட்ட பேச்சி வாரத்தை நடத்தவில்லை என 11 பேர் மட்டும் நடைபெற்ற பணிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கே 57 வயது கொண்ட கழுத்தில் மணிகளை அணிந்து கொண்டு சிவப்பு மஞ்சள் நிறம் கலந்த புடவையை அணிந்திருந்த பெண் ஒருவர் எங்கள மீறி புடிங்கிருவாங்களா ? நொட்டுவாங்களா..? என தமிழில் அர்த்தமே இல்லாத வரத்தைகளை கொட்ட ஆரம்பித்தது விட்டனர். அங்கிருந்த ஒருவர் ஏம்மா இது கலெக்டர் ஆர்டர் மா BDO வும் அனுமதி கொடுத்திருக்காங்க என கூறும்போது அவங்க அனுமதி கொடுத்தா எங்க கிட்ட கேட்கணும் என்று அருகில் உள்ள சிவப்பு சர்ட்டை அணிந்த ஒருவரும், கத்தரிப்பூ சர்ட்டை அணிந்த நபரும் குரலை ஓங்கி உசத்தி பேசினர். இவர்களுக்கு உறவு காரராண அதிமுக ஒன்றிய செயலாளர் சேகர் சொன்ன வசனத்தையே அப்படியே காப்பி அடித்தது போல் கூறினார்கள், அந்த இடத்தில் தான் சந்தேகம் எழுகிறது..?
அதிமுக ஒன்றிய செயலாளர் சேகர் சொன்ன வார்த்தைகளை அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் ஒரு 11 பேர் கொண்ட நபர்கள் மட்டும் கூற காரணம் என்ன..? ஒரு அரசு நிலத்தில் அரசு கொண்டு வந்த திட்டத்தை தடை போடுவதற்கு காரணம் என்ன தெரியுமா? சி எம் ஆர் முருகன் அதிமுகவில் உள்ளார் அவருக்கும் அதிமுக ஒன்றிய செயலாளர் சேகர் அவர்களுக்கும் அரசியல் ரீதியாகவே பிரச்சனைகளும் முன் விரோதங்களும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நாங்கள் கூறுவது பொய்யாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் சம்பவம் நடந்த அன்றைய நேரத்தில் ஒன்றிய செயலாளர் சேகர் அவர்களுடைய தொடர்பு எண்களை வைத்தும் இங்கே பூங்கா அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்த நபர்களின் செல்போன் எண்களை வைத்தும் ஆய்வு செய்யுங்கள் அப்போது உங்களுக்கு புரியும் என்கின்றனர் பொதுமக்கள்...இது பற்றி அதிமுக ஒன்றிய செயலாளர் சேகர் அவர்களிடம் கேட்டபோது... நான் எந்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை மக்கள் பூங்கா அமைக்க வேண்டாம் என்று கூறியதால் நான் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தேன்..மக்கள் எது வேண்டும் என்கிறார்களோ அதையே செய்யட்டும் நான்.. நான் தனிப்பட்ட ரீதியாக அரசின் செயலுக்கு எதிர்ப்பு கொடுக்கல யாரிடமும் தொடர்பு கொள்ளவில்லை இது பற்றி பேசவில்லை என்று கருத்தை முடித்து கொண்டார். இப்படி கூறும்போது அப்பறம் எப்படி மக்கள் சொன்னதை ஏற்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளார் என்ற சந்தேகம் எழுகிறது அப்படின்னா யார் அரசு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என பல சந்தேகங்களை எழுப்புகிறது. பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்ற இடத்தில் சிவப்பு சட்டை அணிந்தவர் செல்போன் மூலம் அழைப்பு கொடுத்து எங்கையோ ஒரு இடத்தில் கொத்தனார் பணிகளை செய்து வந்த நபர்களுக்கு வரவைத்து அங்கே சாதரான நிலையை பரபரப்பாக்கி விட்டார். பிறகு அப்பகுதிக்கு வந்த அண்ணா நகர் இளைஞர்கள் பணிகள் செய்து வந்த ஜேசிபி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு இளைஞர்கள் சி எம் ஆர் முருகனிடம்..உங்க கிட்ட நாங்க என்ன சொன்னோம் வந்து பேச்சு வார்த்த நடத்துங்கனும் சொன்னமா ஏன் செய்யல ? கலக்டர் வேலைய நிப்பாட்ட சொல்லிட்டாங்கதான BDO நிப்பாட்ட சொல்லிட்டாங்கதான அப்ரம் மீண்டும் பூங்கா வேலைய செஞ்சா என்ன அர்த்தம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தகவல் அறிந்து வந்த நடூர் காவல் துறையினர் சம்பந்தபட்ட இடத்திற்கு வந்து பேச்சி வாரத்தை நடத்தினர். அப்போது காவல் துறையினரிடமும் நாங்க விட மாட்டோம் இது எங்க இடம் சந்தை கூடும் இடத்தை ஏன் எடுக்குறிங்க ஏழு ஊர் சம்பந்தப்பட்டது என்று வாக்கு வாதம் செய்த போது "
பேச்சி வாரத்தைக்கு வந்த எஸ் ஐ ஏழு ஊர் சம்பந்தப்பட்டது என்று சொல்றிங்க 6 ஊர் சேர்ந்த கிராம மக்கள் பூங்கா வேணும்னு தீர்மானம் போற்றுக்காங்க உங்க ஊர்ல இருக்குற ஒரு சிலர் பூங்கா வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க நீங்க மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க என்ன அவசியம் இருக்கு இது அரசுடைய நிலம் யாரும் சொந்த கொண்டாட முடியாது கடைசி காலத்தில நமக்கே இடம் இல்லாம நெருப்புல எரிஞ்சிக்கிட்டு இருக்கோம், நம்முளுடைய குழந்தைகளுக்காகத்தான் இந்த பூங்கா வருது நீங்க ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிரீங்க என எஸ் கேட்ட கேள்விக்கு..?
..விடை தெரியாமல் மீண்டும் முதலில் இருந்தே ஆரம்பித்து விட்டனர் " சார் எங்க கிட்ட வந்து சி எம் ஆர் முருகன் பேச்சி வாரத்தை நடத்திட்டு பணிய தொடங்கட்டும் என்று...!
அப்படி என்றால் அந்த இடத்தில்தான் ஆலமான அரசியல் உள்ளது, ஒன்று பணத்திற்காக இருக்கலாம், அல்லது சி எம் ஆர் முருகன் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்காக ஆதிக்கதிற்கு அடிமையை அடையாள படுத்துவதற்காக இருக்கலாம் இல்லை என்றால் யாரோ இவர்களின் பின்னால் இருந்து அரசியல் ரீதியாக ஆதயாம் தேட முயற்சிக்கலாம் என்ற சந்தேகத்தை அப்பகுதி மக்கள் முன் வைக்கின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சம்பந்த பட்ட இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தி மக்கள் வளர்ச்சிக்காக அரசு கொண்டு வந்த பூங்கா திட்டத்தை அமைப்பதற்கு யார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதை ஆய்வு செய்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் இல்லை என்றால் இங்கே அமைதியான சூழலில் மாறி இப்பகுதியில் சாதி ரீதியான மோதல்கள் மத ரீதியான மோதல்களும், பஞ்சாயத்து தலைவர் சி எம் ஆர் முருகனுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைகளும் உருவாக இருக்கும் என அப்பகுதியில் உள்ள இசுலாமியர்களும், பல்வேறு சமூக மக்களும் தெரிவிக்கின்றனர்.
இந்த பூங்கா அமைக்க அண்ணா நகர் பகுதியில் வாழும் ஒரு சில நபர்களை தவிர இவர்கள் சொல்லும் ஏழு ஊர் கிராம மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது நமது இ நியூஸ் 24 இந்தியா கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Comments
Post a Comment