பழிக்குப் பழி பரபரக்கும் தர்மபுரி அரசியல் களம்
தர்மபுரி மாவட்டத்தில் குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் நல திட்டங்களை யார் துவக்கி வைப்பது என்பதில் பெரும் போட்டி நிலவி வந்தது
மக்கள் குறைகளை யார் கேட்கிறார்களோ? இல்லையோ? நடந்து முடிந்த மக்கள் திட்டங்களை துவக்கி வைத்து யார் நல்ல பெயர் எடுப்பது என்பதில் கடும் போட்டி நிலவி வந்தது
தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் நடைபெறும் விலையில்லா மிதி வண்டிகளை பள்ளி குழந்தைகளுக்கு யார் கொடுப்பது? என்பதில் கடும் போட்டி நிலவி வந்தது
இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் அஇஅதிமுக எம்எல்ஏ கோவிந்த சாமிக்கு தண்ணி காட்டும் விதமாக எங்கள் கட்சியிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளார்கள் அவர்களை வைத்து பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி சைக்கிளை நாங்கள் வழங்குகிறோம் என்று வெற்றிகரமாக வழங்கி எம்எல்ஏ கோவிந்தசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்
துவக்க விழாவிற்கு வந்த ஏம் எல் ஏ ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்
இது பழய சம்பவம்
அதை அடுத்து தர்மபுரி மாவட்டம் முழுவதுமே திமுகவினர் மக்கள் நல திட்டங்களை திமுக பிரதிநிதிகளை வைத்து மக்கள் நல திட்டங்களை வழங்கி வந்தனர்
இதனால் தர்மபுரி மாவட்டம் முழுவதும் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலத்திட்டங்களை துவக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது
இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று காத்திருந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி எம்எல்ஏ புதிய சம்பவத்தை வைச்சி செய்துள்ளார்
நாளை புதன்கிழமை காலை மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பூமி பூஜை நடத்தி வைப்பதாக இருந்த வே, முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் சாலை
பாகல்பட்டியில் இருந்து முத்தம்பட்டி வரை சுமார் ஐந்து புள்ளி ஒரு கிலோமீட்டர் தூரம் புதிய தார் சாலை அமைக்கும் திட்டத்தை துவக்கி வைப்பதாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில்
இதை அறிந்து கோபம் கொண்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி
தனது கட்சியினருடன் சென்று ஒரு நாள் முன்னதாகவே முத்தம்பட்டி சாலைக்கு பூமி பூஜை போட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தற்போது அரசியல் கட்சிகளிடம் மாட்டிக் கொண்டு தற்போது திண்டாடி வருகிறது
Comments
Post a Comment