அரூர் திமுக சார்பில் நடைபெற்ற பைக் பேரணியில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் முயற்சி... இப்பவே இப்படின்னா பின்னாடி .... தலைமை கவனிக்குமா...கஷ்டபட்டு பேரணி நடத்தும் மூத்த அரசியல்வாதிக்கு அவமானத்தை ஏற்படுத்தும் ஆரவகோலா..... ஆர்..?

தர்மபுரி மாவட்டம் அரூரில் திமுக சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் செய்தியாளர்களுக்கும் திமுக உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தால் பரபரப்பு.

சேலத்தில் வரும் 27ஆம் தேதி திமுக சார்பில் நடைபெற உள்ள இரண்டாவது இளைஞர் அணி மாநாட்டில் இணைவோம் மாநில உரிமை மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற உள்ள கூட்டத்திற்கும், அதே போல நீட் விலக்கு குறித்தும் இளைஞர் அணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியின் போது செய்தியாளர்கள் செய்தி சேகரித்தனர். 

அப்போது திமுக பொறுப்பாளர் ஒருவர் செய்தியாளர்கள் என்று பார்க்காமல் தரை குறைவாக பேசியும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் நெஞ்சின் மீது கை வைத்து தள்ளியுள்ளார். அப்போது செய்தியாளர்களுக்கும் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து அந்த திமுக உறுப்பினர் ஃபார்ச்சூனர் காரில் ஏரி தப்பிச்செல்ல முயற்சித்த போது அவரை பார்த்த செய்தியாளர்கள் அந்த காரை வழிமறித்து,  தரை குறைவாக நடந்து கொண்ட அந்த நபர் தங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Comments