பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம் வெட்டப்பட்ட கேக்கை எடுத்து ஓட்டம்..!!! திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற சிறப்பான சிரிப்பான கொண்டாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகிய ஒரு கலந்து கொண்டு ஒன்றிய குழு உறுப்பினர் உண்ணாமலை குணசேகரன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசி மற்றும் சக ஊழியர்கள் கவுன்சிலர்கள் வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் அவர்களின் உதவியாளர் சர்மா கலந்து கொண்டனர். அப்போது கேக் வெட்டி முடித்தவுடன் திடீரென்று அங்கே இருந்த கேட்கை எடுத்து ஒருவர் ஓடிய போது அவரை பின்தொடர்ந்து ஓட்டம் பிடித்த நபர்கள் ஒரு பரபரப்பை காட்டிய பின்னர் அவர் மற்ற அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு இனிப்புகள் கொடுத்தும் அங்கே ஒரு நகைச்சுவையான சம்பவத்தை உருவாக்கியதில் அங்கே சிரிப்பொலி ஏற்பட்டது இதனால் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிரிப்பான கொண்டாட்டத்தோடும் மிகவும் சிறப்பான கொண்டாட்டத்தோடும் பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

Comments