மனம் திருந்தி வந்தவருக்கு அரசியல் பாதை அமைத்த பழனியப்பன்..! ஒரே ஒரு பேனரால் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்ட புஷ்பராஜ்..?
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக கட்சிக்குள் இருக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் பேரூராட்சி பதவிக்கான சீட் ஒதுக்கப்பட்டது. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொ மல்லாபுரம் பேரூராட்சியில் திமுக கட்சியில் தோழமை கட்சியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சீட் ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாந்தி புஷ்பராஜ் பேரூராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால் விசிக கட்சியினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது இதை அறிந்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமை கட்டுப்பாட்டை மீறி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள். வெற்றி பெற்றுவிட்டதாக அவர்கள் நினைக்கலாம் ஆனால் கழக தலைவர் என்ற முறையில் நான் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகி நிற்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வு எந்தக் காலத்திலும் உருக்குலைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தும் கூட சாந்தி புஷ்பராஜ் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வராமல் எனக்கு பதவிதான் முக்கியம் கட்சி முக்கியமில்லை கட்சியை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை என்றார் சாந்தி புஷ்பராஜ். இதனால்
Comments
Post a Comment