பொம்மிடி அருகே விஷம் குடித்து இளம் பெண் சாவு போலீசார் விசாரணை

பொம்மிடி அருகே விஷம் குடித்து இளம் பெண் சாவு
 போலீசார் விசாரணை
 
பாப்பிரெட்டிப்பட்டி. நவ, 3 -


 பொம்மிடி அருகே உடல்நிலை சரியில்லை என்பதற்காக விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


 தர்மபுரி மாவட்டம். பொம்மிடி அருகே உள்ள நடூர் பகுதியை சார்ந்தவர் வெங்கடாசலம் கட்டிட மேஸ்திரி . இவரது மனைவி சரஸ்வதி வயது 29,  இவர் பொம்மிடியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்


 இந்த தம்பதியருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்


 வேலைக்குச் சென்று வந்த சரஸ்வதிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது


 இந்த நிலையில் கடந்த 3ம் தேதி தனது வீட்டிலிருந்த போது கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார், இதனால் மணமடைந்த சரஸ்வதி வீட்டில் பதுக்கிவைத்திருந்த விஷத்தை குடித்துள்ளார்
மயங்கிய நிலையில் தனது வீட்டின் கழிவறையில் வாந்தி எடுத்த நிலையில் இருந்துள்ளார்


 இதை கண்ட சரஸ்வதியின் மகள் அம்மா என்ன? என்று கேட்டுள்ளார், அதற்கு தான் விஷம் குடித்துள்ளதாக மகளிடம் தெரிவித்துள்ளார், இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது மகள் போன் மூலமாக தனது தந்தைக்கு தகவலை தெரிவித்துள்ளார்


 பதறி துடித்த இவரது கணவர் வெங்கடாசலம் மயங்கி நிலையில் இருந்த தனது மனைவியை அருகில் உள்ள மருத்துவமனையில் ஆரம்ப சிகிச்சை அளித்து விட்டு உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்


 இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சரஸ்வதிஉயிரிழந்தார்.

. இச்சம்பவம் குறித்து பொம்மிடி பொறுப்பு காவல் ஆய்வாளர் நாகலட்சுமி உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் விக்னேஷ் வழக்கு பதிவு செய்தார்


 இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார் ,இளம் பெண் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் விஷம் குடித்து இருந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Comments