வருங்கால தூண்கள்குழந்தைகள் நலம்தான் முக்கியம்புதிய உணவு கூடம் சிறப்பு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன், ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் பங்கேற்பு

வருங்கால தூண்கள்

 குழந்தைகள் நலம்தான் முக்கியம்


 புதிய உணவு கூடம் சிறப்பு


 மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன், ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் பங்கேற்பு

 இந்தியாவே ஏன்? உலகமே வியந்து பார்க்கும் உன்னதமான திட்டங்களில் ஒன்றுதான் நமது தமிழக முதல்வர் ஏழை எளிய மக்களின் துயரம் துடைக்க கூடிய கலை உணவு திட்டம்

 நம்ப முதல்வர் மு. க .ஸ்டாலின் அவர்களின் கனவு திட்டம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், இந்த திட்டம் அனைத்து பள்ளிகளிலும் தற்போது குழந்தைகள் மற்றும் பெற்றோரின் பெரும் வரவேற்பு கிடையில் சீரும் சிறப்புமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

 இந்தத் திட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பொம்மிடி அருகே உள்ள குண்டல மடுவு அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு அருந்த இடம் இல்லை என்ற கோரிக்கை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பி எஸ் சரவணன் அவர்கள் கவனத்திற்கு சென்றது


 இந்த பகுதி குழந்தைகளின் உணவுகூடம் அவசியம் குறித்தும், அவசரம் குறித்து உடனடியாக திமுக மாவட்ட செயலாளர் பி, பழனியப்பன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆகிய கவனத்திற்கு எடுத்துச் சென்று உடனடியாக தேவை குறித்து எடுத்துச் சென்றார்


 இதன் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்து ரூபாய் 5, 86,000 மதிப்பில் புதிய கட்டிடம் கட்டி திறந்து வைக்கப்பட்டது

 இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன், மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.எஸ். சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்து பள்ளிக் குழந்தைகளுடன் உன் காலை உணவு அருந்தினர்

Comments