பாப்பிரெட்டிப்பட்டி அருகே சொத்து தகராறுஅண்ணன் அண்ணிக்கு அடி, உதை, கத்தியால் குத்திய தம்பி....போலீஸ் விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சொத்து தகராறு
அண்ணன் அண்ணிக்கு அடி, உதை, கத்தியால் குத்திய தம்பி
போலீஸ் விசாரணை

 பாப்பிரெட்டிப்பட்டி. நவ, 10-

 பாப்பிரெட்டிப்பட்டி அருகே சொத்து தகராறு காரணமாக, தனது சொந்த அண்ணனை மச்சானுடன் சேர்ந்து கொண்டு கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மருக்காலம்பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன் இவரது மூத்த மகன் வெள்ளை முருகன் வயது 35, இவரது உடன் பிறந்த தம்பி காந்தி வயது 31 இவர்கள் இருவருக்கும் சொந்தமான வீடு நிலம் உள்ளது

 இதை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகறாரு, ஊர் நியாயம், பஞ்சாயத்து என கடந்த ஆறு வருடங்களாக தீர்வு காணாமல் பிரச்சனை நீடித்துள்ளது 


இந்த நிலையில் இன்று காலை ஒரே இடத்தில் இருவருது வீடும் உள்ளதால் காலையில் எழுந்த தம்பி காந்தி தனது அண்ணனிடம் இது நான் உழைத்து வாங்கிய வீடு, என் உழைப்பால் வந்த சொத்து. எனக்கு தராமல் ஏமாற்றி வருகிறாயா ?என தகராறரில் ஈடுபட்டுள்ளார்

 இதனால் இரு குடும்பத்தினரும், மாறி மாறி கடுமையான வார்த்தைகளால் தீட்டி தீர்த்துள்ளனர்

 அண்ணன் தம்பி சண்டை நடந்து கொண்டிருக்கும்போதே இடையில் தம்பி காந்தியின் மச்சான் பூங்குன்றம் 32 எனது மச்சானிடம் என்ன தகராறில் ஈடுபடுகிறாய்? எனக்கூறி வெள்ளை முருகனின் தலை,கால், உடல் பகுதிகளை கடுமையாக தாக்க துவங்கியுள்ளார்


 ஒரு கட்டத்தில் எல்லை மீறி சென்ற காந்தி தனது அண்ணன் வெள்ளை முருகனை தரையில் இருந்த கற்களை கொண்டும் கடுமையாக தாக்கி, வீட்டுக்குள் ஓடிச் சென்று மறைத்து வைத்திருந்த ஆடு அறுக்கும் கத்தியை கொண்டு முதுகு பகுதியில்  கத்தியால் குத்தியுள்ளார்

 இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளை முருகன் மனைவி தடுக்க வந்த வந்தபோது அண்ணி என்றும் பாராமல் காந்தி அவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்


 இதனால் ரத்த வெள்ளத்திலும், கடுமையான உடல் காயத்துடனும், பாதிக்கப்பட்ட வெள்ளை முருகன் மற்றும் அவரது மனைவி சந்தியா உடனடியாக அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்


 இச்சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

 இருதரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

 தனது அண்ணன் மற்றும் அண்ணியை சொந்த தம்பியே கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Comments